கருத்துக் கணிப்பு- அதிமுக 46%, திமுக 44%
சென்னை:
தமிழகத்தில் அதிமுக, திமுக இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில்தெரியவந்துள்ளது.
ராஜ்தீப் சர்தேசாய் தலைமையிலான சிஎன்என்- ஐபின் தொலைக்காட்சி, த ஹிந்து நாளிதழ் ஆகியவற்றுடன்இணைந்து சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.அதிமுக கூட்டணி 46 சதவீத வாக்குகளையும் திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளையும் பெறக் கூடும் எனஇதில் தெரியவந்துள்ளது. இதனால் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என்றுதெரிகிறது.
விஜய்காந்தின் தேமுதிகவுக்கு 5 சதவீத வாக்குகளும் பாஜகவுக்கு ஒரு சதவீத வாக்குகளும், சுயேச்சைகள் மற்றும்பிற கட்சிகளுக்கு 4 சதவீத வாக்குகளும் கிடைக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது.
58 தொகுதிகளில் 4,781 வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 30 சதவீதவாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர் அல்லது யாருக்குவாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவிலலை.
இதனால் இவர்களது வாக்குகளே முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றன.
கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நிலவிய எதிர்ப்புஅலை இப்போது இல்லை. அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதி 39 சதவீத வாக்குகளையும் ஜெயலலிதா 42 சதவீதவாக்குகளையும் பெற்று முன்னிலையில் உள்ளார்.
5 சதவீதம் பேர் விஜயகாந்த் பெயரை சொல்லியுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு தலா 1 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 2 சதவீத வாக்குகள் அதிகமாகக் கிடைத்தாலும், கருத்துக் கணிப்பில்மார்ஜின் ஆப் எரர் 1 முதல் 2 சதவீதம் வரை இருக்கும் என்பதால், எந்தக் கூட்டணி வெல்லும் என்றுசொல்வதற்கில்லை.
மேலும் பாமக பெல்டில் திமுக கூட்டணி வெகு பலமாக உள்ளதால், 2 சதவீத வாக்குகள் பின்னணியில்இருந்தாலும் திமுகவுக்கு இந்தப் பகுதிகளில் அதிகபட்ச இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் 2 சதவீத வாக்குப் பின்னடைவை திமுக கூட்டணி இந்தப் பகுதிகளில் சமன் செய்துவிடும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இதனால் எந்தக் கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலையில்உள்ளதாக கருத்துக் கணிப்பை நடத்திய சிஎஸ்டிஎஸ்சின் தலைவர் யோகேந்தர் யாதவ் கூறியுள்ளார்.
234 பேர் கொண்ட சட்டசபையில் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் 117 (பெரும்பான்மைக்குத் தேவைப்படும்இடங்கள்) இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள் இருப்பதால் பிரச்சாரத்தின்போது நிலைமை மாறலாம் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. மொத்தத்தில் ஜெயலலிதா மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருந்த கோபம்வாக்காளர்களிடத்தில் இப்ாது இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா எடுத்த பல்வேறு முடிவுகள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதாக 67சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாப்புலரான முதல்வர், சிறந்த முதல்வர், சிறந்த நிர்வாகி, ஊழலை ஒழிப்பதில் சிறந்தவர் யார் என்றகேள்விகளுக்கு கருணாநிதியை விட ஜெயலலிதாவே அதிக வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகவாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் விஜயகாந்த் கட்சியால் அதிமுகவை விட திமுகவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்றும், தேமுதிகவுக்குவாக்களிப்பவர்களில் சுமார் 48 சதவீதம் பேர் திமுக அனுதாபிகள் என்றும், 25 பேர் அதிமுக அனுதாபிகள்என்றும் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் 5 சதவீத வாக்குகளைப் பெறும் விஜய்காந்த் கட்சிக்கு தேர்தலில் வெற்றி என்பது சந்தேகமே.
இவ்வாறு கருத்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications