என் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமையும்-சு.சுவாமி
சென்னை:
வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. எனவே ஜனதாக்கட்சியின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமையும் என்று ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம சுவாமி கொஞ்சம் கூட சிரிக்காமல் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் ஜனதாக் கட்சிதனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:- கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வரப்படும்
-டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள்உள்ளிட்டோருக்கான தனி நபர் வருமான வரி ரத்து செய்யப்படும்
-விவசாயம் உற்பத்தி தொழிலாக அங்கீகரிக்கப்படும்
-தென்னக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
-தென்னை, பனை தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை கிராம மக்கள் கள் உற்பத்தி செய்யதடை நீக்கப்படும்
-ரேஷன் முறையை ரத்து செய்து விட்டு குடும்பத்தின் தேவைக்கேற்ற பொருட்கள்வழங்கப்படும்
என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், வரும் தேர்தலில் யாருக்கும்மெஜாரிட்டி கிடைக்காது. எனவே ஜனதா கட்சியின் உதவியுடன்தான் அடுத்து யாரும்ஆட்சி அமைக்க முடியும்.
அப்படி அமையும் ஆட்சி கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். ஜனதா கட்சிஎம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாவும் இடம் பெறுவர்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமைய நாங்கள்தான் காரணம், நாடாளுமன்றவளாகத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைய நாங்கள்தான் காரணம்,முல்லைப் பெரியாறு அணை வழக்கைத் தொடர்ந்ததும் நாங்கள்தான்.
இப்படி பல நல்ல காரியங்களை தமிழகத்திற்காக நாங்கள் செய்துள்ளோம்.
எங்களது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனு தாக்கல்செய்கிறார்கள். நான் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்காகவும் பிரசாரம்செய்யவுள்ளேன் என்றார் சுவாமி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications