விஜய்யை நான் சந்திக்கவில்லை.. தலைமை செயலகத்தில் நடந்தது என்ன? போட்டு உடைத்த தெருக்குரல் அறிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே சந்தித்ததாகவும், முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை என்றும் பாடகர் தெருக்குரல் அறிவு பதிவிட்டுள்ளார். நேற்று முதல்வர் விஜய்யை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில் தெருக்குறள் அறிவு இதனை மறுத்துள்ளார். மேலும், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் முன்பாக பாடகர் தெருக்குரல் அறிவு நேற்று திடீர் போரட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அறிவு, சிறிது நேரத்தில் தலைமைச் செயலகம் அழைத்து வரப்பட்டார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில், அறிவு அதனை மறுத்துள்ளார்.

Therukural Arivu Aadhav Arjuna Vijay protest

உடனடியாக நிறுத்த வேண்டும்

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் தெருக்குரல் அறிவு பதிவிட்டு இருப்பதாவது:- நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (நேற்று) காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.

நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.

ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே சந்தித்தேன்

இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன். நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் வரை வந்து வழியனுப்பிய ஆதவ்

சென்னையிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் நேற்று சென்னை தலைமை செயலகம் முன்பாக பிரபல ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கோஷமிட்டபடியே உள்ளே நுழைய முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவருடன் வந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அறிவு கைதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, சிறிது நேரத்தில் தலைமைச் செயலகத்திற்கு அறிவு அழைத்து வரப்பட்டார். சுமார் அரை மணி நேரம் கழித்து, வெளியே வந்த அறிவை கார் வரை வந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழியனுப்பி வைத்தார். தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை அறிவு சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+