பழனி கோவில் நிலம்.. பத்திரப்பதிவு நடந்தது எப்படி? நிலத்தை வாங்கியவர் முன் ஜாமீன் மனுவில் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழனி கோவில் நில முறைகேடு விவகாரம் தமிழகத்தில் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அந்த நிலத்தை வாங்கியுள்ள வெள்ளத்துரை தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பத்திரப்பதிவில் என்ன நடந்தது, எப்படி ரூ.2 கோடிக்கு நிலத்தை பதிவு செய்தார் என்ற தகவல்கள் அவரது ஜாமீன் மனுவில் இடம் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. பழனி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். பழனி மலை அடிவாரத்தில் முருகன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் தற்போது பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக உள்ளது.

Palani temple land Palani temple land registration High Court


ஜாமீன் கேட்டு மனு

சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி என்ற தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறநிலையத்துறை உடனடியாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குக் தொடர்ந்தது. இதையடுத்து நிலம் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சார் பாதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முன் ஜாமீன் வழங்கிய நிலையில், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வெள்ளத்துரை தனக்கு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பணம் எப்படி கிடைத்தது?

சமீபத்தில் சொத்து ஒன்றை விற்றதன்மூலம் ரூ.2 கோடி பணம் கிடைத்தது. இந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்தால் வரி செலுத்த வேண்டியிருக்கும். அதனால், இன்னொரு இடத்தில் முதலீடு செய்யுமாறு எனது ஆடிட்டர் அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில், நிலம் வாங்க முடிவு செய்தேன். அப்போதுதான் பழனி மலை அடிவாரத்தில் இருக்கும் நிலம் விற்பனைக்கு வந்த விவரம் தெரியவந்தது.

ஆவணங்களை பார்த்ததில் நிலம் சம்பந்ந்தமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தது தெரியவந்தது. இதனால், அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தேன். நிலத்தின் ஆவணங்கள் போலி என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுத்ததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று அதன் பிறகு பத்திரப்பதிவு செய்து உரிமையை பெற்றேன்.

என்னை பொய்யாக சிக்க வைத்துள்ளனர்

அதை தவிர எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் என்னை பொய்யாக சிக்க வைத்து இருக்கிறார்கள். பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. உழைத்து சேர்த்த பணத்தில் இந்த நிலத்தை வாங்கினேன். என் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு எனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் சிபிசிஐடி போலீசாரை ஒருதரப்பாக சேர்ப்பதாகவும், மனுவை இன்று விசாரிப்பதாகவும் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+