ஸ்ரீபெரும்புதூர்:லாரி-வேன் மோதலில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் மோதிக் கொண்டதில் 4 பேர்பலியாயினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
பூந்தமல்லியில் இருந்து பாறாங் கற்களை ஏற்றிக் கொண்டு அந்த லாரி ஸ்ரீபெரும்புதூர் சென்று கொண்டிருந்தது.கற்களை ஏற்றிச் செல்லுகிறோம் என்ற அறிவு கூட இல்லாமல் லாரியை படு வேகத்தில் ஓட்டினான் டிரைவர்.அப்போது எதிரே வந்த வேன் மீது லாரி பயங்கர வேகத்தில் மோதியது. அதில் வேன் தூக்கி வீசப்பட்டுஅதிலிருந்த ஒரு பெண் பலியானார்.
லாரியில் பாறைகளின் மீது அமர்ந்திருந்த 3 தொழிலாளர்களும் லாரியோடு சேர்ந்து கவிழ்ந்தனர். இதில் 3 பேரும்பலியாயினர்.
மேலும் வேனில் இருந்து 9 பேரும் படுகாயமடைந்தனர். திருவள்ளூர் அருகே உள்ள மாப்பேடு கிராமத்துக்குசம்மந்தம் பேச அந்த வேனில் இருந்தவர்கள் சென்று கொண்டிருந்தனர். காயமடைந்தவர்களில் 4 பேரின்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications