அன்பரசு மீது செக் மோசடி-மிரட்டும் போத்ரா
சென்னை:
சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு மீது விரைவில் செக்மோசடி வழக்கு தொடரப் போவதாக சென்னை திரைப்பட பைனான்சியர் குல்சந்த்போத்ரா மீண்டும் மிரட்டியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு சோளிங்கர்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அங்குள்ளகாங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.இந் நிலையில், அன்பரசு மற்றும் அவரது குடும்பம் தன்னிடம் ரூ. 35 லட்சம் பணத்தைமோசடி செய்து விட்டதாக பைனான்சியர் போத்ரா பரபரப்பு புகார் கூறினார்.இப்புகாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி வைத்தார்.
ஆனால் அன்பரசு இப்புகாரை மறுத்தார். மேலும் தனக்கு செல்போன் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அருள் அன்பரசுவும் புகார் கூறினார்.
இந் நிலையில் குல்சந்த் போத்ரா இன்னொரு புகாரை வெளியிட்டுள்ளார்.செய்தியாளர்களிடம் போத்ரா கூறுகையில்,
அன்பரசு, அருள் அன்பரசு ஆகியோர் மீது நான் பண மோசடி புகார் கூறியதைத்தொடர்ந்து அன்பரசு தரப்பினர் ரூ. 35 லட்சம் பணத்திற்கான காசோலையைவழங்கினர். இதை நான் வங்கியில் போட்டேன். ஆனால் அவர்களது வங்கிக்கணக்கில் பணமில்லாத காரணத்தால் காசோலை திரும்பி வந்து விட்டது.
எனவே பண மோசடி செய்ததோடு, வங்கியில் பணமில்லாத நிலையில்காசோலையைக் கொடுத்ததற்காக அன்பரசு குடும்பத்தினர் மீது செக் மோசடி வழக்கைவிரைவில் தொடரவுள்ளேன் என்றார் போத்ரா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications