மனோ உள்ளே- களமிறங்கும் கராத்தே
சென்னை:
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தவன்முறைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த வட சென்னை காங்கிரஸ்தலைவர் ராயபுரம் மனோ காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார்கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 25ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானார்கள்.ராயபுரம் மனோவும், அவரது ஆதரவாளர்களும்தான் செல்லக்குமாரின்ஆதரவாளர்களை கொலை வெறியுடன் தாக்கினர்.
இதையடுத்து ராயபுரம் மனோ உள்ளிட்ட 7 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனது புஜபலத்தைக் காட்டிய ராயபுரம் மனோ பின்னர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
போலீஸார் மனோவைத் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், அவர் எஸ்கேப்ஆனதோடு தலைமறைவும் ஆகிவிட்டார்.
இதனால் ராதாகிருஷ்ணன் நகரில் காங்கிரஸ் வேட்பாளரே இல்லாமல் பிரச்சாரம்செய்ய வேண்டிய அவல நிலைக்கு திமுக கூட்டணி தள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில் மனோ தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னைஉயர்நீதிமன்றம், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மட்டும் ஒரு நாள் முன்ஜாமீன்வழங்கியது.
அதன் பின்னர் அண்ணா சாலை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடையவும்உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்த மனோ, அண்ணா சாலை காவல்நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் அவரை எழும்பூர் 13வது குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மனோவும் கராத்தே தியாகராஜனும் காங்கிரசில் இருந்தபோதும் சரி பின்னரும் சரிஎலியும் பூனையுமாக இருந்தவர்கள்.
அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தபோதுமனோவுக்கு பல வகையிலும் டார்ச்சர் தந்தவர் கராத்தே.
இப்போது மீண்டும் காங்கிரசுக்கு வந்துள்ள கராத்தே தனது தவறுகளை திருத்திக்கொள்ள வசதியாக மனோவுக்காக பிரச்சாரப் பணிகளை கவனிக்கப் போகிறாராம்.
வழக்கில் உள்ளே போய்விட்ட மனோவின் சார்பில் காங்கிரஸ் பிரச்சாரத்தைக்கவனிக்க கராத்தேவின் உதவியை மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிகோரினார். இதை கராத்தே ஏற்றுக் கொண்டுவிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications