தியாகி திண்டிவனத்துக்கு தியாகத்தின் சின்னம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என தமிழகஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

அதிமுகவின் தூண்டுதலால் காங்கிரஸ் கட்சியில் கலகம் செய்து, அங்கிருந்துவெளியேற்றப்பட்டு அதிமுகவில் தஞ்சமடைந்து அங்கு ஒரு இடம் கூட கிடைக்காமல்பெரிய ஆப்பு வைக்கப்பட்டு, தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியைத்தொடங்கி தனியே நிற்கும் திண்டிவனம் ராமமூர்த்தி வருகிற சட்டசபைத் தேர்தலில்தனித்துப் போட்டியிடுகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நாங்கள் 35 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அத்தனை தொகுதிகளுக்கும்வேட்பாளர்களைஅறிவித்து விட்டோம். எங்களது கட்சியை தேர்தல் ஆணையம் பதிவுசெய்துள்ளது. அனைத்து வேட்பாளர்களுக்கும் மெழுகுவர்த்தி சின்னம் கிடைக்கும்என எதிர்பார்க்கிறோம்.

காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலோடு அழிந்து விடும். போட்டியிடும் 48தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தகராறு உள்ளது.

இலவச அறிவிப்புகளை திமுகவும், அதிமுகவும் வெளியிட்டு வருகின்றன. இது பயன்தராது. கல்விக்குத்தான் இப்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இலவச டிவி கொடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ஒரே வீட்டில் பத்து குடித்தனங்கள்இருக்கின்றன. அப்படிப்பட்ட இடத்தில், வீட்டின் உரிமையாளருக்கு மட்டுமே டிவிகிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. வாடகை வீட்டுக்காரருக்கு டிவி கிடைக்காதுஎன்றார் திண்டிவனம்.

அதிமுகவை நம்பி அத்தனையையும் இழந்து, தமிழக அரசியலில் தியாகத்தின் லேட்டஸ்ட் உதாரணமாக திகழும் திண்டிவனம் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம்கிடைப்பது சாலப் பொருத்தமாக அமையும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+