ஜெவுக்கு எதிராக பா.பிளாக் வேட்பாளர் போட்டி:மாற்று வேட்பாளராக கார்த்திக்
ஊட்டி:
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்ட பார்வர்ட் பிளாக் செயலாளர்பொன்.முருகன் போட்டியிடுவார். அவர் நாளை மனு தாக்கல் செய்வார். அவருக்கு மாற்று வேட்பாளராக நான்போட்டியிடுகிறேன். நானும் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று பார்வர்ட் பிளாக் தலைவரும் நடிகருமானகார்த்திக் கூறியுள்ளார்.
ஊட்டியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி சேரப் போவதாக வதந்தி கிளப்பி வருகிறார்கள். 3 தொகுதிகளை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணியில் நாங்கள் ஐக்கியமாகப் போவதாக சொல்வதில் உண்மையில்லை. கூட்டணிக்காக45 நாட்கள் காத்திருந்தோம். தகுதி அறிந்து கேட்க வேண்டும் என்று பேசினார்கள்.
அதனால் தான் வெளியே வந்தோம். இப்போது தனித்துப் போட்டியிடுகிறோம். அந்த முடிவில் எந்த மாற்றமும்இல்லை.
எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது. 3 பேர் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் கொடுத்துள்ளோம். தொடர்ந்து மிரட்டினால் நாங்களும் புலியாக மாறுவோம்.
எங்கள் கட்சி தேசிய கட்சி. சிங்கம் சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும்.
தொண்டர்களை குழப்புவதற்காகவே அதிமுகவுடன் கூட்டு என்று வதந்தி கிளப்புகிறார்கள். அதை யாரும் நம்பவேண்டாம்.
திமுக கூறியுள்ள கலர் டிவி, 2 ரூபாய்க்கு அரிசி சாத்தியம் தான் என்று மத்திய நிதியமைச்சரே கூறிவிட்டார்.இதனால் அது சாத்தியமாகத் தான் இருக்கும். வரும் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணிஆட்சி தான் அமையும்.
சரத்குமார் அதிமுகவில் இணைந்தது அவரது சொந்த முடிவு. அவருக்கு நல்ல முடிவை அவர் எடுத்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்ட பார்வர்ட் பிளாக் செயலாளர் பொன்.முருகன் போட்டியிடுவார். அவர் நாளைமனு தாக்கல் செய்வார். அவருக்கு மாற்று வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். நானும் வேட்பு மனு தாக்கல்செய்வேன். ஆனால், நான் போட்டியிடுவேனா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் கார்த்திக்.ஆண்டிப்பட்டியில் மாற்று வேட்பாளராக கார்த்திக் போட்டியிடுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்,கடைசி நேரத்தில் பொன்.முருகனை வாபஸ் பெற்றுவிட்டு அவருக்குப் பதிலாக கார்த்திக்கே போட்டியிடவும்வாய்ப்புள்ளது.
ஜெவை டென்சனாக்கும் தட்டிகள்:
இதற்கிடையே மதுரை உள்ளிட்ட சில தென் மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் கார்த்திக் ரசிகர்கள், சில தேவர்அமைப்புகள் இணைந்து அதிமுகவுக்கு எதிராக களமிறங்கி வருகின்றன.
கார்த்திக்கால் முக்குலத்தோர் வாக்குகள் பிரியும் என்பதால் அவரை பல வகையிலும் மிரட்டி, அரட்டி வருகிறதுஅதிமுக தலைமை.
நடராஜன் மூலமாக தாஜா செய்ய முயன்று முடியாமல் போனதால் அடாவடிக்குப் பேர் போன பிலிம்பைனான்சியர், ஒரு மூத்த விஐபி சினிமா இயக்குனர், மதுரை சாமியார் ஒருவர், உளவுப் பிரிவு என பலவகையிலும் கார்த்திக்குக்கு மிரட்டல்களும் உருட்டல்களும் வந்தவண்ணம் உள்ளன.
கடந்த வாரம் அவரை முதுகுளத்தூரில் உள்ள தேவர் சமாதிக்குக் கூட அனுமதிக்காமல் இழுத்தடித்தனர் போலீசார்.கடும் போராட்டம், வாக்குவாதத்துக்குப் பின்னரே கார்த்திக்கால் அங்கு செல்ல முடிந்தது.
மேலும் மதுரைப் பகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த அவர் திடீரென சென்னைக்குக் கிளம்பிவிட்டார். அதற்கு,தேர்தல் கமிஷன் வேலை என்று பார்வர்ட் பிளாக் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.
ஆனால், உண்மையான காரணம் கார்த்திக்கைப் பிடித்து உள்ளே போட போலீசார் திட்டமிட்டது தானாம்.முதல்வர் தென் மாவட்ட பிரச்சாரத்தை முடிக்கிற வரை இந்தப் பக்கமே வரக் கூடாது. வந்தா.. தேர்தல் முடியிறவரை உள்ளே வச்சுருவோம் என்று கார்த்திக் நேரடியாகவே மிரட்டப்பட்டதாக சொல்கிறார்கள்.
இதையடுத்தே அவர் வம்பு வேண்டாம் என்று சென்னைக்கு விமானம் ஏறினாராம்.
இது ஒருபுறமிருக்க தென் மாவட்டங்களில் தேவர் அமைப்புகளும் கார்த்திக் ரசிகர்களும் கூட்டு சேர்ந்துஅதிமுகவுக்கு எதிராக வேலைகளில் இறங்கியுள்ளனர். சில தேவர் சமூக கிராமங்களில், இந்தப் பகுதிக்குள் ஓட்டுகேட்டு எந்த வேட்பாளரும் வர வேண்டாம். எங்கள் வாக்கு சிங்கம் சின்னத்துக்கே (பார்வர்ட் பிளாக்) என்றுதட்டிகள் எழுதி ஊருக்கு வெளியே வைக்க ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவலை அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு சென்றதாகவும்இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் பசும்பொன் தேவர் மாணவர் இயக்கத் தலைவரான வக்கீல் வெள்ளச்சாமி தேவரை அழைத்துப் பேசியஜெயலலிதா,
முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு அப்படியே வர வேண்டும். கார்த்திக் வசம் போய்விடக் கூடாது.அதற்காக என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்று கூறி கவனித்து அனுப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
வெள்ளைச்சாமிக்கு உதவுமாறு போலீசுக்கும் உத்தரவு போயுள்ளதாம்.
இந் நிலையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் பெரியகுளம் தொகுதியில் அவருக்கு புதுத் தலைவலிஉருவாகியுள்ளது.
முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் இப் பகுதியில் ஜெயலலிதாவின் படத்துடன் அதிமுக கூட்டணித் தலைவர்களின்படங்களும் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்தொல்.திருமாவளவனின் முகத்தை மட்டும் கிழித்து எறிந்துள்ளனர்.
இந்த வேலையைச் செய்த அதிமுகவினர் மீது சிறுத்தைகள் கடும் கோபத்துடன் உள்ளனர். இதையடுத்து கிழியல்ஸ்பெஷலிஸ்டுகளைக் கூப்பிட்ட மந்திரி ஓ.பி. தேர்தல் முடியிற வரைக்கும் கொஞ்சம் சும்ம இருங்கப்பா என்றுபஞ்சாயத்துப் பேசி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications