கருணாநிதி குடும்ப சொத்து ரூ. 26.5 கோடி: ஜெவை மிஞ்சினார்!
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனது சொத்து விவரப் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.அதில் தனக்கு சொந்தமாக வீடு, கார், நிலம் என எதுவும் இல்லை என்றுதெரிவித்துள்ளார்.
எல்லாம் மனைவிகள் பெயரிலேயே உள்ளதாகக் கூறியுள்ளார்.சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த கருணாநிதி, அத்துடன் தனதுசொத்து விவரம் குறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அதன் விவரம்:
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 26.5 கோடியாகும்.
இதில் ரூ. 5 கோடி கோடம்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் பிக்சட் டெபாசிட்டாகவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு வங்கிகளில் ரூ. 15 லட்சம் பணம் முதலீடுசெய்யப்பட்டுள்ளது.
தயாளு அம்மாள் பெயரில் ரூ. 12.5 கோடி கோடம்பாக்கம் இந்தியன் வங்கிகிளையில் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியின் ராஜா அண்ணாமலைபுரம் கிளையில் தயாளு அம்மாள் பெயரில்ரூ. 5 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கி முதலீடுகள், சேமிப்புக் கணக்குகள் என மொத்தம் ரூ. 25 லட்சம் பணத்தைபல்வேறு வங்கிகளில் தயாளு அம்மாள் போட்டு வைத்துள்ளார்.
தயாளு அம்மாளுக்குச் சொந்தமாக நவீன ஹோண்டா அக்கார்ட் கார், ரூ. 5 லட்சம்நகைகள் ஆகியவையும் உள்ளன.
கோபாலபுரத்தில் உள்ள வீடு கருணாநிதிக்கு சொந்தமானதல்ல என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்து அனுபவித்துக் கொள்ளும் உரிமைமட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார் கருணாநிதி.
அதேபோல தஞ்சை மாவட்டம் திருநள்ளாறு கிராமத்தில் உள்ள 13.30 ஏக்கர்நிலத்தையும் அவர் ஆண்டனுபவித்துக் கொள்ளலாம், ஆனால் அந்த நிலம் அவரதுபெயரில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
அஞ்சுகம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் கருணாநிதியிடம்உள்ளன. அதேபோல தயாளு அம்மாளுக்கும் 50 சதவீத பங்குகள் உள்ளன.
தயாளு அம்மாள் தனது பெயரிலான அறக்கட்டளைக்குத் தலைவராக உள்ளார். அந்தஅறக்கட்டளைக்கு மதுரை அருகே உள்ள மாடக்குளத்தில் 21 சென்ட் நிலம் உள்ளது.
இன்னொரு மனைவியான ராஜாத்தி அம்மாளுக்கு மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் ரூ.3.02 கோடி மதிப்பிலான வீடு உள்ளது. ஒரு டாடா இண்டிகோ கார், ரூ. 5.08 லட்சம்மதிப்புள்ள நகைகள் உள்ளன.
தமிழ்க்கனி பதிப்பகத்தின் உரிமையாளராக ராஜாத்தி அம்மாள் உள்ளார். அந்தநிறுவனத்துக்கு ரூ. 20.75 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இதுதவிர ரூ. 5.41 லட்சம் முதலீட்டுடன் ராயல் பர்னிச்சர் நிறுவனம் ராஜாத்திஅம்மாளுக்கு சொந்தமானதாக உள்ளது.
11வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கருணாநிதி தன் மீது 9 வழக்குகள்நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் ஐந்து வழக்குகள் அவதூறு வழக்குகள். அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தைஆதரித்ததற்காக டெஸ்மா சட்டத்தின் கீழ் 2 வழக்குகளும், மத நம்பிக்கையைஇழிவுபடுத்தும் வகையில் பேசியது, எழுதியது தொடர்பாக 2 வழக்குகளும்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கருணாநிதி.
சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல், கரூர் அமராவதி ஆற்றுப் பாலஊழல் தொடர்பான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்னும் நீதிமன்றங்களுக்கு இந்த வழக்குகள் போகவில்லை என்பதால் அதைகுறிப்பிடவில்லை என்றும் கருணாநிதி தனது பிரமாணப் பத்திரத்தில்தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சொத்து ரூ. 1.50 கோடி:
அதே போல திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தனக்கு ரூ. 1.50 கோடிமதிப்புள்ள அசையும், அசையாச் சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார் ஸ்டாலின். அப்போது தனது சொத்துக்கள் குறித்த பிரமாணப்பத்திரத்தைதாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
வங்கி முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 31.46 லட்சம்.அசையாச் சொத்தின் மதிப்பு ரூ. 1.19 கோடி.
ஸ்டாலின் பெயரில் சொந்தக் கார் கிடையாது. மனைவியிடம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள720 கிராம் எடை கொண்ட பழைய தங்க நகைகள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 3.85 ஏக்கர் விவசாய நிலம்உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 2.86 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது என்றுபிரமாணப்பத்திரத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 24.65 கோடி சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications