என் மகள் பிரியங்கா காந்தி எங்கே? போலீஸ் நிலையத்துக்கு தேடிச்சென்ற சோனியா காந்தி.. அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தான் மகள் பிரியங்கா காந்தியை தேடி அவரது தாய் சோனியா காந்தி டெல்லி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். ஆனால் போலீசார் கேட்டை மூடி அனுமதி மறுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் முன்பு காங்கிரஸ் தலைவர்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி தனித்தனியாக அழைத்து சென்றனர்.

Priyanka Gandhi

கைது நடவடிக்கைக்கு பிறகு டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தில் பிரியங்கா காந்தி உள்பட இன்னும் சில காங்கிரஸ் தலைவர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் சோனியா காந்தி உடனடியாக தனது காரில் மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அதேபோல் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லியில் .ள்ள சத்ரசால் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+