அரிசி: தோல்வி பயத்தில் ஜெ- எதிர்க் கட்சிகள்
சென்னை:
கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்த திமுகவை விமர்சித்து வரும்வைகோவுக்கு, 10 கிலோ அரிசி இலவசம் என்று கூறி ஜெயலலிதா சரியானமூக்கறுப்பு செய்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதி செய்தியாளர்களிடம்பேசுகையில்,திமுகவின் தேர்தல் அறிக்கையில், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்றோம். அதைஅதிமுகவும், அவர்களுடைய புதிய தோழர் மதிமுகவும் கடுமையாக விமர்சித்தனர்.இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று ஏளனம் பேசினர்.
இப்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அம்மையார்அறிவித்துள்ளார்.
இது ஒரு கொள்கை முடிவு அல்ல, பயனற்ற அறிவிப்பு, ஏமாற்று வேலை.
கிலோ அரிசி 2 ரூபாய் என்று திமுக கூறியதை கடுமையாக விமர்சித்த வைகோஜெயலலிதாவின் அறிவிப்பை வரவேற்பாரா? அப்படியானால் அவருக்கு இதுசரியான மூக்கறுப்பாகும் என்று கூறினார் கருணாநிதி.
ராமதாஸ் தாக்கு:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ஒரு முதல்வர் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயலாகும். திமுக தனதுஅறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. ஆனால், ஜெயலலிதாவோ அதை ஒரு தெருவோரக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் விதிமீறலை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
ஜெயலலிதாவின் தோல்வி பயமும் இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது. இது திமுக கூட்டணிக்குக் கிடைத்த முதல் வெற்றி. 2001ல் ஆட்சிக்கு வந்தஜெயலலிதா தான் அரிசி விலையை உயர்த்தினார் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் கேள்வி:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
இரண்டு ரூபாய்க்கு எப்படி ஒரு கிலோ அரிசியைத் தர முடியும் என்று கேள்வி எல்லாம் கேட்டவர் ஜெயலலிதா? அவர் மட்டும் எப்படி இப்போது இலவசஅரிசியைத் தர முடியும்?. திமுக தேர்தல் அறிக்கை மாநிலம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கத்தால் மிரண்டு போய் இந்த அறிவிப்பை ஜெயலலிதாவெளியிட்டுள்ளார். இது கருணாநிதிக்கு முதல் வெற்றி.
மிடாஸ் முறைகேடு: கருணாநிதி தாக்கு
இதற்கிடையே சசிகலாவின் ஆட்களுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையின் முறைகேடுகாளால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்புஏற்பட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு மதுபான நிறுவனம் ஆண்டுக்கு இத்தனை பெட்டி மதுபானங்களைத் தான் தயாரிக்க வேண்டும் என்று அரசு வரைமுறை வைத்துள்ளது.
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்களால் நடத்தப்படும் மிடாஸ் மதுபான நிறுவனத்திற்கு இந்த வரைமுறை தளர்த்தப்பட்டுஆண்டுக்கு எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுபான நிறுவனங்கள் ஆண்டுக்கு எவ்வளவு எரிசாராயம் வாங்க வேண்டும் என்றும் நிர்ணயம் உள்ளது. இதுவும் மிடாஸ் நிறுவனத்துக்குத்தளர்த்தப்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் சில்லறை மதுபான விற்பனையை அரசே எடுத்துக் கொண்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மிடாஸ் நிறுவனத்தின் மது பான விற்பனை8 மடங்காக அதிகரித்துள்ளது.
மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் எக்ஸைஸ் லேபிள்கள் திமுக ஆட்சிக் காலத்தில் பலத்த பாதுகாப்புடன் அரசு அச்சகங்களில் அச்சிடப்படும்.
ஆனால் மிடாஸ் நிறுவனம் தனியார் அச்சகங்களில் எக்ஸைஸ் லேபிள்களை அச்சிட்டதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications