இலவச அரிசி அறிவிப்பால் திமுக கலக்கம்-வைகோ
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 10 கிலோ இலவச அரிசி என்ற அறிவிப்பால்திமுக கூட்டணி பெரும் கலக்கமடைந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.
பூந்தமல்லி மதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து இன்று வைகோ பிரசாரம்செய்தார்.அப்போது அவர் பேசுகையில், கலைஞர் முரசொலியில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதில், நடுநிலைப் பத்திரிகைகளை சாடியுள்ளார்.
வைகோவை திட்டுங்கள் பரவாயில்லை, என் பேச்சை வெளியிடும் பத்திரிகைகளைஏன் திட்டுகிறீர்கள், சாடுகிறீர்கள்.? குமுதம் பத்திரிக்கை கருத்துக் கணிப்புவெளியிட்டதற்கு பெட்டி பெட்டியாக கொட்டினார்கள் என்று கூறினீர்கள்.
கடந்த எம்.பி. தேர்தலின்போது இதே குமுதம் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்போது39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று குமுதம் எழுதியபோது,எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தீர்கள்?
மே 11ம் தேதி மக்கள் தங்களது கருத்துக் கணிப்பை வெளியிடுவார்கள். அப்போதுமக்களைத் திட்டுவீர்களா? அரிசி விலையை மத்திய அரசு உயர்த்தியது. தேர்தலுக்குப்பின்னர் இதை அமல்படுத்தலாம் என கருதினார்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதா,தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இப்போது நிறுத்திவைத்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா10 கிலோ இலவச அரிசி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.இதை நான் வரவேற்கிறேன். இந்தத் திட்ட அறிவிப்பால் திமுக கூட்டணி பெரும்கலக்கமடைந்துள்ளது என்றார் வைகோ.
தாகம் தீர்த்த ஜெயாவுக்கே ஓட்டு:
முன்னதாக மைலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரான நடிகர் எஸ்.வி.சேகரைஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்,
கடந்த பத்து நாட்களாக புதுப்புது வாக்குறுதிகளாக கொடுத்து வருகிறார் கருணாநிதி.இப்படிச் சொன்னாலாவது ஏதாவது சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று விடமாட்டோமா என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு சொல்லி வருகிறார்.மத்திய அரசு அரிசி விலையை உயர்த்தியபோது அதை எதிர்த்து குரல் கொடுத்த ஒரேதலைவர், முதல் தலைவர் ஜெயலலிதாதான்.
மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் எதிர்ப்புக் குரல் கொடுத்தார். ஆனால் கருணாநிதிஅப்போது என்ன செய்து கொண்டிருந்தார்? 2 ரூபாய்க்கு அரிசி தருவோம் என்றுஇப்போது கூறும் கருணாநிதி அப்போது எங்கே போயிருந்தார்?
ஆனால் மத்திய அரசு விலையை உயர்த்தியும் கூட தமிழக அரசு அரிசி விலையைஉயர்த்தாமல் அதே ரூ. 3.50 விலையில்தான் இன்றளவும் கொடுத்து வருகிறது. 2ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவது சாத்தியம் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.
அப்படியானால் அதை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தலாமே? திமுகதலைமையை திருப்திப்படுத்துவதற்காக மக்களிடம் பொய் பேசக் கூடாது.
இன்று சென்னை மக்கள் தண்ணீர்ப் பிரச்சினையின்றி, தாகம் தீர்ந்து மகிழ்ந்துபோயிருக்கிறார்கள். வரவே வராது என்று சொன்ன வீராணம் திட்டம் இன்றுவெற்றிகரமாக நிறைவேறி தினசரி தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.
இந்தக் கடும் கோடையிலும் சென்னை நகரின் எந்தப் பகுதியிலும் தண்ணீர்ப்பிரச்சினை இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் ஜெயலலிதாதான். சென்னை மக்களின்ஓட்டுக்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்குத்தான்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முழு அளவில்ஆயத்தமாக உள்ளபோதிலும், அதற்கு இடையூறாக இருந்து வருகிறது மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம். இந்த துறையின் அமைச்சர் திமுகவைச் சேர்ந்த ராஜா.
ஆனால் எண்ணூ
வைகோவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கடும் வெயிலையும்பொருட்படுத்தாமல் அப்படியே இருந்தது.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த வைகோ, யாராவது எழுந்து போவார்கள், நாமும்பேச்சை முடிக்கலாம் என்று பார்த்தால் யாரும் எழுந்து போக மாட்டேங்கிறீங்களே,என்ன இங்கே வெயில் காய்கிறதா இல்லை பெளர்ணமி நிலவு வீசுகிறதா என்றுசிரித்துக் கொண்டே கேட்டார்.
இதைக் கேட்டதும் கூட்டத்தில் பலத்த சிரிப்பொலி கிளம்பியது. அப்படியே தனதுபேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினார் வைகோ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications