தாஜா: மீண்டும் காங்கிரசில் செல்லக்குமார்!
சென்னை:
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி சமீபத்தில் கட்சியை விட்டுநீக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக்டர் செல்லக்குமார் மீண்டும்அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகர் தொகுதியை எதிர்பார்த்து செல்லக்குமார் பெரும்எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால் அத்தொகுதி திமுகவுக்குப் போனதால்ஆத்திரமடைந்த செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.இதற்கு உச்சகட்டமாக சத்தியமூர்த்தி பவனில் செல்லக்குமாரின் ஆதரவாளர்கள்போராட்டம் நடத்தியபோது அவரை வாசன் ஆதரவாளரான ராயபுரம் மனோஉள்ளிட்டோர் மிகக் கடுமையாக தாக்கி விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் மனோவை போலீசார் கைது செய்ய அலையஅவர் தலைமறைவானார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி கைதானார்.
இந்த விவகாரத்தில் செல்லக்குமாரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆனால், இப்போது சிறையில் உள்ளதால் மனோவால் பிரச்சாரம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. வேட்பாளரே இல்லாமல் ராதாகிருஷ்ணன் நகர் தொகுகியில்பிரச்சாரம் செய்து வருகிறது காங்கிரஸ்.
இதையடுத்து செல்லகுமாரை தாஜா செய்து புகாரை வாபஸ் வாங்கச் செய்தால்மட்டுமே மனோ வெளியில் வர முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து செல்லக்குமாரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாநில காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் செல்லக்குமார் மீதுவிதிக்கப்பட்ட தற்காலிக நீக்க உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்மீண்டும் கட்சியில் இணைந்து பழையபடி செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
1996ம் ஆண்டு தி.நகர் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்லக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications