தோல்வியை ஜெ உணர ஆரம்பித்துவிட்டார்-வாசன்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

கடந்து ஐந்து ஆண்டுகளில் 10 கிலோ இலவச அரிசியைக் கொடுக்காமல் இப்போதுகொடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சுத்த ஏமாற்று வேலைஎன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

2 ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்கப்படும் என திக தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளதை சில நாட்களுக்கு முன்பு வரை விமர்சித்து வந்தவர்கள், எப்படி10கிலோ இலவச அரிசியை வழங்கப் போகிறார்கள்?

தேர்தல் தோல்வியை முழுமையாக உணர்ந்துள்ள காரணத்தால், திடீரென இலவசஅரிசி என்று அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் ஜூரமே இதற்குக் காரணம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேச்சும், அவரது செயல்பாடுகளும் தமிழகமக்களிடம் எடுபடவில்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மாற்றம் தொடர்பாக தேர்தல்ஆணையத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது தமிழக அரசு. தேர்தல்ஆணையத்தின் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தமிழக அரசு மறையாகப் பின்பற்றிநடக்க வேண்டும் என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+