அமைச்சர் ராமசாமியின் சீட் பறிப்பு: பழனி அதிமுக வேட்பாளரும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை - நாகர்கோவில்:

தாம்பரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயந்தி, கட்சிநிர்வாகிகளின் நெருக்கடி காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அதன்தலைவர் நடிகர் விஜயகாந்த்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராகஅறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. இவர் கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு ஒரு கடிதம்அனுப்பியுள்ளார்.

அதில், நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் மாவட்ட கட்சிநிர்வாகிகளால் பல வகைகளில் நெருக்கடிக்கு ஆளானேன். தர்மன் என்பவருக்குஆதரவாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

எனவே நான் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று ஜெயந்தி தனதுகடிதத்தில் கூறியுள்ளார்.

ஏற்கனவே உட்கட்சிப் பூசல், ஜாதிப் பூசலால் ஓரிரு வேட்பாளர்கள் போட்டியிலிருந்துவிலகிக் கொள்வதாக விஜயகாந்த்துக்கு முன்பே கடிதம் அனுப்பியிருந்தனர்.அவர்களை சமாதானம் செய்தார் கேப்டன். இந் நிலையில் தற்போது மேலும் ஒருவேட்பாளர் போட்டியிட மறுத்து விலகியுள்ளது தே.மு.தி.க. வட்டாரத்தில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.

குமரி வேட்பாளர் மாற்றம்:இதற்கிடையே கன்னியாகுமரி தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர்திடீர் என்று மாற்றப்பட்டுள்ளார்.

இந்தத் தொகுதியின் விஜயகாந்த் கட்சி வேட்பாளராக மாவட்ட மகளிர் அணித்தலைவி சுப. காயத்ரி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு கட்சியினர்மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு தந்திகள் பறந்தன. இந்நிலையில் சுப. காயத்ரி மாற்றப்பட்டு அலெக்ஸ் சாந்தகுமார் என்பவர் புதியவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சுப.காயத்ரி கூறுகையில், எனக்கு எதிர்ப்பு வலுத்ததால் நான்மாற்றப்படவில்லை. எனது குடும்பச் சூழல் மற்றும் உடல் நலம் காரணமாகவே நான்மாற்றப்பட்டுள்ளேன்.

விஜயகாந்த் மற்றும் கட்சிக்கு வெற்றி தேடித் தரும் வகையில் நான் கட்சிப் பணியில்ஈடுபடுவேன் என்றார் காயத்ரி.

தேமுதிகவின் நாணயமான பிரசாரம்:

இதற்கிடையே நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தேசிய முற்போக்குதிராவிட கழக வேட்பாளர் முத்துக்குமாரசாமி நூதனமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது பிரசாரம் படு சிக்கனமாக இருப்பதாக தே.மு.தி.க.காரர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள்.

10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள முத்துக்குமாரசாமி, தனது கட்சிக்காரர்களிடம்500 ரூபாயை ஒத்த ஒத்த ரூபாயாக சில்லறை மாற்றிக் கொடுத்து விடுகிறார்.

இதற்காக 10 பேரையும் அவர் நியமித்துள்ளார். அவர்களது வேலை என்ன தெரியுமா?ரொம்ப சிம்பிள்!

பொது தொலைபேசி மையத்திற்கு இவர்கள் செல்கிறார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ளஒரு ரூபாய் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒவ்வொரு தொலைபேசி எண்ணாகத்தொடர்பு கொண்டு இப்படிப் பேசுகிறார்கள்:

வணக்கம், தே.மு.தி.கவிலிருந்து பேசுகிறோம். வருகிற தேர்தலில் உங்களதுபொன்னான வாக்குகளை தே.மு.தி.க. வேட்பாளருக்கே போடுங்கள், நன்றி என்றுகூறி போனை வைக்கிறார்கள்.

முத்துக்குமாரசாமி நியமித்துள்ள இந்த பத்து பேரும் பெண்கள் என்பது தான் இதில்குறிப்பிட வேண்டிய பாயிண்ட்.

இனிய குரலில் ஒரு ரூபாய் செலவில் வாக்கு சேகரிக்கும் முத்துக்குமாரசாமியின்பிரசார உத்தி தொகுதியைக் கலக்கி வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+