போலீஸை அடக்க ஆணையத்துக்கு திமுக எச்சரிக்கை
சென்னை:
திமுக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரசார திரைப்படத்திற்கு காவல்துறை அதிகாரிகள்அனுமதிக்க மறுக்கிறார்கள். இதில் தலையிட்டு உரிய தீர்வு காண தேர்தல் ஆணையம்முன் வராவிட்டால் ஆணையத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தப்படும் எனதிமுக எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக சார்பில் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்குஅனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரத் திரைப்படம்தயாரிக்கப்பட்டு அதற்கு தணிக்கைச் சான்றிதழும் முறையாகப் பெறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் திரையிட உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் அனுமதியேபோதுமானது.
ஆனால் ஆளுங்கட்சிக்குத் துணையாக நிற்கும் சில காவல்துறை அதிகாரிகள், பிரசாரபடத்திற்கு அனுமதி தர மறுத்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சனையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல்துறைஅதிகாரிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் இதைச் செய்யத் தவறினால் ஆணையத்தை எதிர்த்து பெரும்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேலிக்கூத்து: ஸ்டாலின்
இந் நிலையில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழுத்தாளர்சல்மாவுக்கு ஆதரவாக துவரங்குறிச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி தரப்படும் என திமுகதேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை சிலர் கடுமையாக விமர்சித்தனர், இதுமுடியுமா, நடக்குமா என்று கேள்விகளை அடுக்கி கேலி பேசினர்.
ஆனால் இன்று அவர்களே 10கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் எனஅறிவித்துள்ளனர். இதிலிருந்து, அவர்களது தோல்வியை அவர்களே ஒப்புக்கொள்வது போலத் தெரிகிறது.
தோல்வியை சந்திக்க அவர்கள் தயாராகி விட்டனர்.
அதிமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி அநியாய ஆட்சி, இந்த ஆட்சி எக்காரணம்கொண்டும் நீடிக்கக் கூடாது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications