மேலவளவு படுகொலைகள்: 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!
சென்னை:
மதுரை மாவட்டம் மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட6 பேர் தலித்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்கு விதிக்கப்பட்டஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத்தலைவராக இருந்தவர் முருகேசன்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் தலைவரானதை எதிர்த்து ஆதிக்கஜாதியினர் மிரட்டல் விடுத்து வந்தனர். இந் நிலையில் முருகேசனும் அவரதுசமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் கடந்த 1997ம் ஆண்டு பஸ்சில் வைத்து கொடூரமாகவெட்டிக் கொல்லப்பட்டனர்.
தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த படுகொலைச் சம்பவம்தொடர்பாக 40 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது முதலில் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும்சாட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டது.
அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.மற்ற 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் 23 பேரை விடுவித்ததை எதிர்த்து கொலை செய்யப்பட்டவர்களின்குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து அனைவரையும் கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட 17 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், பால் வசந்தகுமார்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அதில், 17 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள்தீர்ப்பளித்தனர்.
மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடுசெய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாதது துரதிர்ஷ்டவசமானது.
அரசுத் தரப்பில் 23 பேரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதகாரணத்தால், இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள்தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications