வேட்பு மனு தாக்கல் முடிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதிதொடங்கியது. புதுவையில் 27 தொகுதிகளுக்கும் அன்றே வேட்பு மனு தாக்கல்தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3மணியுடன் முடிவுக்கு வந்தது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் இதுவரை கிட்டத்தட்ட 2,700 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிஉள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மனுக்களைத் தாக்கல் செய்தனர். புதுவை தல்வர்ரங்கசாமியும் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 24ம் தேதிக்கள்மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல்வெளியிடப்படும்.

தமிழகத்தில் வாக்குப் பதிவு மே 8ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 11ம்தேதி நடக்கிறது. அன்றே முடிவும் தெரிந்துவிடும்.

அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மே 8ம் தேதி பொது விடுமுறை:

வாக்குப் பதிவு நடக்கவுள்ள மே 8ம் தேதி பொது விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளஅறிவிப்பில், மே 8ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுநடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அன்றைய தினம்பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

அரசுத்துறைகள் தவிர வணிக, தொழில் நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறையாகஇருக்கும். அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களும், தங்களது நிறுவனத்தில்பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+