ஜெவின் அரிசி ரகசியம்: ராமதாஸ் சஸ்பென்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவின் இலவச அரிசி அறிவிப்பு குறித்து இன்று மாலை சைதாப்பேட்டை பொதுக் கூட்டத்தில் ரகசியதகவல் ஒன்றை வெளியிடுவேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தாம்பரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில்,

அதிமுகவில் இருந்து ஒருவர் கூட சட்டசபைக்குப் போகப் போவதில்லை. அது மட்டும் உறுதி. 2 ரூபாய்க்கு அரிசிதருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. உடனே போட்டிக்கு 10 கிலோ அரிசி இலவசமாகத் தருவதாகஜெயலலிதா அறிவிக்கிறார்.

இதை தேர்தல் அறிக்கையிலோ பிரச்சாரம் தொடங்கும் முன்போ அறிவிக்காமல் தேனியில் ஒரு முட்டுச் சந்தில்போய் நின்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?. உண்மையிலேயே தருவதாக இருந்தால் தேர்தல்அறிக்கையில் சொல்லியிருக்கலாமே.

அதுவும் இந்த அறிவிப்பை வெளியிட்டவர் ஒரு முதல்வர். தனது அறிவிப்புக்கு முன் அமைச்சர்களுடன் கலந்துபேசினாரா? உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தாரா?. இல்லை.. ஏன்? சும்மா பேச்சுக்குத் தரும் உறுதிமொழிதானே.

ஜெயலலிதாவின் இலவச அரிசி அறிவிப்பு குறித்து இன்று மாலை சைதாப்பேட்டை பொதுக் கூட்டத்தில் ரகசியதகவல் ஒன்றை வெளியிடுவேன்.

கருணாநிதியை ஆட்சியில் அமர வைக்க உறுதுணையாக இருப்பேன். இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்றார்ராமதாஸ்.

முன்னதாக ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரம் செய்த ராமதாஸ், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும்அரியலூரைத் தலைநகராகக் கொண்ட தனி மாவட்டம் உருவாகச் செய்வேன்.

கடந்த திமுக ஆட்சியில் அரியலூரின் வளர்ச்சிக்காக பெரம்பலூரைப் பிரித்து அரியலூர் மாவட்டத்தைஉருவாக்கினார் கருணாநிதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரியலூர் மாவட்டத்தை மீண்டும்பெரம்பலூருடன் இணைத்துவிட்டார் என்றார் ராமதாஸ்.

பணநாயகம் தோற்கும்: இளங்கோவன்

இந் நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,

மத்திய அரசு கொண்டு வரும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வருவதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 1,000 கோடி தருவதாக அறிவித்தது. இதை தமிழக அரசுபயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஜனநாயக நெறிமுறைகளை சற்றும் மதிப்பதில்லை ஜெயலலிதா. அவரது பண நாயகம், ஜனநாயகத்துடன் மோதிக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில்அவரது பண நாயகம் படு தோல்வி அடையும்.

திமுக தலைமையிலான அணியின் ஜனநாயகம் வெற்றிபெறும்.

தேர்தல் நெருங்கும் வேளையில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என ஜெயலிலதா கூறுகிறார். இதை ஏன் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாகச்செய்யவில்லை என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+