அரசு குழந்தைகள் மருத்துவனை டாக்டர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து 12 நாளே ஆன குழந்தை இறந்ததையடுத்து 2டாக்டர்களை குழந்தையின் உறவினர்கள் தாக்கினர். இதையடுத்து டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும்திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அந்தக் குழந்தை 3 நாட்களுக்கு முன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு இறந்தது.டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததாகக் கூறிவிட்டு குழந்தையை ராயபுரத்தில்உள்ள தங்கள் வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் 4 ஆட்டோக்களில் 25 பேருடன் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தனர். அங்கு எமர்ஜென்சிவார்டுக்குள் அடாவடியாக நுழைந்து டாக்டர் ஆனந்த், டாக்டர் சுரேஷ் குமார் ஆகியாைரை இரும்புக் கம்பிகளால்தாக்கிவிட்டுத் தப்பினர்.
இத் தாக்குதலை கண்டித்து இன்று மருத்துவமனை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அவர்களுடன்நலத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications