அதிமுக மிரட்டல்-தூக்கு போட்ட பார்வர்ட் பிளாக் வேட்பாளர் மரணம்-கடத்தப்பட்டாரா கார்த்திக்?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அதிமுகவினரின் மிரட்டலால் விஷம் குடித்தும் பின்னர் தூக்கும் மாட்டிக் கொண்டுகவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்வர்ட்பிளாக் வேட்பாளர் செந்தில் மரணமடைந்தார்.

மதுரை திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில்அதிமுகவினரின் பயங்கர மிரட்டலால் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தானநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலைமை மோசமாகவே இருந்தது. இந் நிலையில் அவர் மரணமடைந்தார்.

கார்த்திக் சந்திப்பு:

இந் நிலையில் நேற்று முழுவதும் காணாமல் போய்விட்ட பார்வர்ட் பிளாக் தலைவர்கார்த்திக் மாலையில் திடீரென மதுரை வந்தார்.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த வேட்பாளர்செந்திலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் அவரது குடும்பத்தினருக்குஆறுதல் கூறினார். (இதன் பின்னர் நள்ளிரவில் தான் செந்தில் இறந்தார்)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கார்த்திக். அப்போது, நீங்கள் ஆண்டிப்பட்டியில்வேட்பு மனு தாக்கல் செய்துவிடாமல் தடுக்க உங்களை ஆளும் தரப்பினர் கடத்திச்சென்றுவிட்டதாக செய்திகள் வந்ததே என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கார்த்திக், என்னை யாரும் கடத்தவில்லை என்றார்.

அப்படியானால் நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?

உங்களை கட்சியினரால் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே? செல்போனையும்ஆப் செய்து வைத்து விட்டீர்கள், உங்களை யாரும் கடத்தினார்களா? என்று நிருபர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு கார்த்திக் பதிலளிக்கையில், என்னை யாரும் கடத்தவில்லை, அப்படிவெளியான செய்தியில் உண்மை இல்லை. நான் ஆண்டிப்பட்டியில்போட்டியிடவில்லை. அப்படி நான் ஒருபோதும் சொல்லவில்லை என்றார்.

அதன் பின்னர் மீண்டும் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

இதற்கிடையே, நான் நேரடியாக பிரசாரத்திற்கு வர மாட்டேன் என்று கட்சியினரிடம்கார்த்திக் கூறி விட்டதாகத் தெரிகிறது.

அதற்குப் பதிலாக, தனது பேச்சு அடங்கிய கேசட்டுகளை அனைத்து மாவட்ட கட்சிநிர்வாகிகளிடம் கார்த்திக் கொடுத்துள்ளார்.

அந்த கேசட்டுகளை ஊர் ஊராக சென்று ஒலிபரப்பி பிரசாரம் செய்யுங்கள் என்றும்அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக தரப்பிலிருந்து வரும் கடும் நெருக்கடிகள், மிரட்டல்கள் காரணமாகவேகார்த்திக் தலைமறைவு அரசியல்வாதி போல மாறி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருமங்கலம் தொகுதியில் செந்திலுக்குப் பதில் துணை நடிகரான ராஜுஎன்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கார்த்திக், சத்தியராஜ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவரும்திருமங்கலத்தைச் சேர்ந்தவர்தான்.

கார்த்திக்கை ஆளும் தரப்பினர் கடத்தி விட்டதாக நேற்று முழுவதும் பார்வர்ட் பிளாக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தன்னை யாரும்கடத்தவில்லை என்று கார்த்திக் கூறினாலும், ஏதோ ஒன்று நடக்கிறது என்பது மட்டும்புரிகிறது.

இதற்கிடையே செந்திலின் மரணத்தைத் தொடர்ந்து ஏராளமான பார்வர்ட் பிளாக்தொண்டர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார்குவிக்கப்பட்டனர்.

கார்த்திக்குக்கு சிங்கம் சின்னம்:

இந் நிலையில் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்குசிங்கம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இந்தச் சின்னத்தை முடக்க அதிமுக மறைமுகமான நடவடிக்கைளில் இறங்கியது.சின்னத்தை அவருக்கு ஒதுக்கக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஒருவழக்குத் தொடரப்பட்டது.

இந்த விஷயத்தில் 10 நாட்களில் முடிவெடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம்உத்தரவிட்டது. இதையடுத்து கார்த்திக் தரப்புக்கே சிங்கம் சின்னத்தை ஒதுக்க தேர்தல்ஆணையம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+