சென்னை, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஸ்டிரைக்: நோயாளிகள் பெரும் அவதி
சென்னை:
சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவனை டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக்கண்டித்து சென்னை மற்றும் மதுரையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைடாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இங்குயாஸ்மின் என்பவரின் 13 நாள் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. ஆனால்,சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது.
இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி அங்கு இருந்த டாக்டர்ஆனந்த் என்பவரிடம் குழந்தையின் உறவினர்கள் முறையிட்டனர்.
அப்போது அங்கு வந்த பயிற்சி டாக்டர் சுரேஷ்குமார் என்பவர், மிகவும் கோபமாகஉங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறவே அவர்கள்ஆத்திரமடைந்தனர்.
வீட்டுக்கு குழந்தையுடன் பிணத்துடன் சென்ற அவர்கள் பின்னர் 5 ஆட்டோக்களில்மருத்துவமனைக்குத் திரும்பி வந்தனர்.
அலட்சியமாகப் பேசிய டாக்டர் சுரேஷ்குமாரையும் டாக்டர் ஆனந்தையும்சரமாரியாகத் தாக்கினர். இதில் சுரேஷ்குமார் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
இதைத் தொடர்ந்து பயிற்சி டாக்டர்களும், மருத்துவமனை டாக்டர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி பணியில்ஈடுபடாமல் மருத்துவமனையிலேயே வேலை நிறுத்தம் செய்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பிற ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் குழந்தைகள் நல மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது, மருத்துவமனைஸ்தம்பித்தது.
இன்று 2வது நாளாக அங்கு ஸ்டிரைக் தொடர்கிறது. எழும்பூர் மருத்துவமனைடாக்டர்களுக்கு ஆதரவாக அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லிமருத்துவமனைகளிலும் டாக்டர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்ததால்நிலைமை மோசமடைந்துள்ளது.
டாக்டர்கள், ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான நோயாளிகள்சிகிச்சை எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மதுரை அரசு பொதுமருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் அங்கும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பயிற்சி டாக்டரைத் தாக்கியவர்களில் 3 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இருப்பினும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து குற்றவழக்கு தொடுக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றுடாக்டர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications