புதுவை: இரட்டை இலையில் சிறுத்தைகள் போட்டி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்வேட்பாளர்கள் இருவரும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ்போட்டியிடுவார்கள் என அதிமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள், புதுவையிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அங்குஏம்பலம், நெடுங்காடு ஆகிய இரு தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகளுக்குஒதுக்கப்பட்டுள்ளது.இரு தொகுதிகளிலும் தங்களுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தின் கீழ் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தற்போதுஅதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள்முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தரப்பில் கூறுகையில், இரட்டை இலைச் சின்னத்தின் கீழ்தாங்கள் போட்டியிட விரும்புவதாக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கோரிக்கைவிடப்பட்டது. அதை அதிமுக தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது என்றனர்.
புதுவையில் அதிமுக 16 தொகுதிகளிலும், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் 10தொகுதிகளிலும், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும்போட்டியிடுகின்றன.
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி தலில் இரட்டை இலைச் சின்னத்தில்போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது சுயேச்சை சின்னத்தின் கீழ்போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications