திமுகவின் கலர் டிவி விண்ணப்பம்: பாஜக புகார்
கோவை:
கலர் டிவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பொது மக்களிடம் வினியோகித்ததிமுகவினர் குறித்து பாஜக வேட்பாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்துதிமுகவினரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் டிவி இல்லாத வீடுகளுக்கு கலர் டிவி தரப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கணக்கெடுப்பு தொடங்கி விட்டதாக திமுகதலைவர் கருணாநிதியும் கூறியுள்ளார்.இந் நிலையில், கோவை குனியத்தூர் பகுதியில் திமுகவினர் சிலர் வீடு வீடாக சென்றுவிண்ணப்பம் ஒன்றைக் கொடுத்தனர். அப்போது உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள், டிவி இல்லாவிட்டால் சொல்லுங்கள், டிவி வாங்கித் தருகிறோம்,அதற்கான விண்ணப்பம்தான் இது. பூர்த்தி செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி அங்கு விரைந்தார்.திமுகவினர் கொடுத்த விண்ணப்பங்களை பொது மக்களிடமிருந்து பெற்றுகுனியத்தூர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் ஆசை வார்த்தை கூறி திமுகவினர் வாக்குசேகரிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீஸார் திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன்என்பவரை அழைத்து விசாரித்தனர்.
பின்னர் இதுபோல இனிமேல் நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார்கூறினர்.












Click it and Unblock the Notifications