நான் கம்ப்யூட்டர் தர்றேன்: மூமுக உதார்!
கடையநல்லூர் :
என்னை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுங்கள், வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் இலவசமாகதருகிறேன் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக வேட்பாளர் அதிரடியாகஅறிவித்துள்ளார்.
திராவிடக் கட்சிகளுக்கு இணையாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிவேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் ஏகப்பட்டகட்சிகள். அதில் ஒன்றுதான் டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் ன்னணிக்கழகம். இக்கட்சிக்கு ஐந்து தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது.ஐந்து தொகுதிகளில் ஒன்று கடையநல்லூர். இதில் மூவேந்தர் ன்னணிக் கழகம் சார்பில்சக்திவேல் என்பவர் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளர் சக்திவேல்தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார்.
கடையநல்லூரில் அவர் பிரசாரத்தில் பேசுகையில், இரு திராவிடக் கட்சிகளும் அரிசிஅரசியலில் இறங்கியுள்ளன. அதாவது ஓட்டுக்களை அள்ள அரிசி வலையைவிரித்துள்ளன.
அரசன் கொடுத்தால் என்ன, அரசு கொடுத்தால் என்ன, அரிசி கொடுத்தால் போதும்என்றுதான் மக்கள் நினைப்பார்கள் என இரு கட்சிகளும் முடிவு கட்டி விட்டன.
ஆனால் இன்றைய மக்கள் நிலை அப்படி இல்லை. இங்கு அரிசிக்குப் பஞ்சமா வந்துவிட்டது? இல்லை பட்டினிச் சாவுதான் தலைவிரித்தாடுகிறதா? பிறகு எதற்கு இந்தஅரிசி அரசியல்.
என்னை நீங்கள் தேர்ந்தெடுங்கள். வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் தருகிறேன். அடிப்படைவசதிகளை, தொழிற் கூடங்களை வழங்கி அயராது பாடுபடுவேன், சமூகப் பாதுகாப்பு,கல்வி, வேலை வாய்ப்பை வழங்குவேன்.
யாரிடமும் பணத்துக்காக விலை போக மாட்டேன். என்னைக் கடத்தி விட்டார்களேஎன்று கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்க மாட்டேன் (கார்திக்கை தாக்குறாரு) என்றார்சண்முகவேல்.
கோபுரத்தில் ஏறி...
இந் நிலையில் நிலக்கோட்டையில் கோவில் கோபுரத்தின் மீது ஏறி அங்கு வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் ஓட்டு வேட்டையாடினார் அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்.
ஜெயித்த பிறகும், தேர்தல் நேரத்திற்கு முன்பும் பார்க்கவே முடியாத பலவேட்பாளர்களை பல்வேறு கோலங்களில் பிரசார நேரங்களின்போது மக்கள்பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.
அந்த வகையில், நிலக்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் சக்திவேல் படுதீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். தொகுதி முழுவதும் நடையாய் நடந்துதீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாரத்தின்போது சாலையோரம் இருந்த ஒரு கோவிலின் கோபுரத்தின் மீது சிலதொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த அவர், சரசரவெனசாரத்தின் வழியாக கோபுரத்தின் உச்சிக்குச் சென்றார்.
வேட்பாளரைப் பார்த்த தொழிலாளர்கள் ஆச்சரிய அதிர்ச்சி அடைந்தனர். பத்திரமாவாங்க சார் என்று அவரை வரவேற்ற தொழிலாளர்களிடம், மறக்காம கைசின்னத்துக்கு ஓட்டுப் போட்டுடுங்க என்று கூறிய சக்திவேல், ஒவ்வொருவரிடம் கைகுலுக்கிக் கொண்ட பின்னர் அதே வேகத்தில் கீழே இறங்கினார்.
ஒரு ஓட்டைக் கூட விட்டு விடக் கூடாது என்ற சக்திவேலின் ஆர்வத்தைப் பார்த்து கூடவந்தவர்கள் ஆச்சரியமடைந்ததனர்.
காலில் விழுந்து...
இவருக்கு சற்றும் இளைத்ததவர் இல்லை என்பது போல தேசிய முற்போக்கு திராவிடகழக வேட்பாளர் ரவிச்சந்திரனும் அசத்தி வருகிறார்.
ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ள அவர் பட்டிவீரன்பட்டி என்ற இடத்தில் பிரசாரத்தில்ஈடுபட்டிருந்தபோது, வாக்காளர்கள் அனைவரின் காலிலும் போய் டமார் டமார் என்றுவிழுந்து ஓட்டு வேட்டையாடினார். (ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக முழுத்தகுதி படைத்தவர்)
ஒரே பெண் வேட்பாளர் ஜெ:
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் என்றபெருமை முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன. ஆண்டிப்பட்டி, பெரயகுளம்,தேனி, கம்பம், போடிநாயக்கனூர் ஆகியவையே அந்தத் தொகுதிகள்.
இத் தொகுதிகளில் அனைத்து முக்கியக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்த ஐந்து தொகுதிகளிலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டுமே பெண் வேட்பாளர்போட்டியிடுகிறார். அவர் ஜெயலலிதா. மற்ற கட்சிகள் பெண் வேட்பாளர்களைகளத்தில் நிறுத்தவில்லை.
சுயேச்சையாகக் கூட பெண்கள் யாரும் போட்டியிடவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத் தொகுதிகளில் ஆண்டிப்பட்டியில் மட்டுமே இதுவரை பெண்கள்வெற்றி பெற்று வந்துள்ளனர். முதலில் 1962ம் ஆண்டு ஆண்டிப்பட்டி(ஒருங்கிணைந்த தொகுதியாக இருந்தபோது) தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்சார்பில் கிருஷ்ணவேணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் 2002ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் ஜெயலலிதா இத்தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். 1989ல் போடிதொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதுநினைவிருக்கலாம்.
மிகவும் பின் தங்கிய பகுதியான தேனி மாவட்டத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தஜெயலலிதா 3வது முறையாக வெற்றியை எதிர்நோக்கி போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications