வைகோவின் நூல்களை எரிக்க வேண்டும்: சுப.வீ
சென்னை:
சிறையில் இருக்கும்போது வைகோ எழுதிய நூல்களை எரிக்க வேண்டும் என்று தமிழறிஞர் சுப.வீரபாண்டியன்கூறினார்.
அம்பத்தூரில் தென்னவன் கலைமன்றம் சார்பில் சட்டமன்றத் தேர்தலும் தமிழர்கள் கடமையும் என் தலைப்பில்பொதுக் கூட்டம் நடந்தது.பொடாவில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அக் கூட்டத்தில் பேசினார். இக் கூட்டத்தில்கவிஞர் அறிவுமதி, இயக்குனர் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சுப.வீ பேசுகையில்,
பொடா சட்டம் இன்னும் போகவில்லை. எங்களுக்கும் மதிமுக தோழர்களுக்கும் வழக்கு நடக்கிறது. பொடாவில்கைதான மதிமுக தோழர்கள் நீதிமன்ற்ததுக்குப் போய் வந்துவிட்டுத் தான் ஜெயலலிதா புகழ் பாட வேண்டியநிலையில் இருக்கிறார்கள்.
சிறையில் இருக்கும்போது வைகோ எழுதிய நூல்கள் யாவும் சிறப்பானவை. ஆனால், இப்போது அவர்பேசுவதும் நடப்பதும் எதிர்மறையாக உள்ளது. அப்படியானால் முதலில் வைகோ எழுதிய நூல்களை எரிக்கவேண்டும்.
ஜெயலலிதா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மக்களுக்கு பல சோதனைகளைத் தந்துவிட்டு இப்போது பறித்தசலுகைகளைத் திரும்பத் தந்து நடிக்கிறார்.
ஜெயலலிதாவும் சசிகலாவும் கொஞ்சம் திருந்திக் கொண்டால் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு நிதிப் பஞ்சமேஇருக்காது. தமிழ்நாட்டுப் பணம் எல்லாம் அவர்களிடம் தான் இருக்கிறது.
வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்து தமிழ்நாட்டின் அடையாளங்களை உலகுக்குத்தெரியப்படுத்தியவர் கருணாநிதி. ஆனால், கண்ணகி சிலையைத் தூக்கி தமிழர்களின் அடையாளங்களை அழித்துவருபவர் தான் ஜெயலலிதா.
நடிகர் விஜய்காந்த் வீட்டுக்கே ரேசன் அரிசியைக் கொண்டு வருவதாகக் கூறுகிறார். ஜெயிக்க முடியாதவர்கள்எதை வேண்டுமானாலும் கூறலாம். 26 வருடம் டூயட் பாடிவிட்டு இப்போது மக்கள் சேவை வசனம் பேசவந்துவிட்டார்.
கருணாநிதி மட்டும் இல்லாவிட்டால், நானோ, வைகோவே பொடாவில் இருந்து வெளியே வந்திருக்கவேமுடியாது.
கருணாநிதி தவறு செய்தால் அவரை விமர்சிக்கவும் முடியும். யாராலும் அவரை நேரில் அணுகவும் முடியும்.
ஆனால், ஜெயலலிதாவை யாராலும் சந்திக்கவும் முடியாது. விமர்சிக்கவும் முடியாது. விமர்சித்தால் கொன்றுபோட்டுவிடுவார் என்றார் சுப.வீ.
ராமராஜனும் பிஜேபியும்.. இயக்குனர் சீமான் பேச்சு:
என்னடா இது திரைப்பட இயக்குனரான சீமான் வந்து அரசியல் பேசுறானேன்னு நீங்க நினைக்கலாம். எங்க ஊர்லசிம்ரனும் விந்தியாலும் கோவை சரளாவும் அரசியல் பேசும்போது பெரியாரின் பேரனான சீமான் பேசக் கூடாதா?நான் என் மக்களுக்காக அரசியல் பேச வந்திருக்கிறேன்.
தூங்காதே தம்பி தூங்காதேன்னு பாட்டெழுதிய மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை ஒரு இடத்துல திருடாதேபாப்பா திருடாதேன்னும் எழுதினான். ஏன் பாப்பான்னு பாடுறான்? எதிர்காலத்து தாய்தமிழ் நாட்டை இருபாப்பாக்கள் வந்து கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று தெரிஞ்சே பாடியிருக்கான்.
இந்த நடிகர், நடிகைகள் எல்லாம் ஓடிப் போய் அரசியல்ல சேர்றாங்க. எந்த நடிகனாவது மார்க்கெட் இருக்குறப்பஎந்தக் கட்சிக்காவது போயிருக்கானா? போன வருஷத்துல சிம்ரன் ஏன் போகலை? சரத்குமார் இப்ப இவ்வளவுகுத்தம், குறை சொல்றாரு.. அவரு ஏன் 3 மாசம் முன்னாடி அங்கே போகலே?
தேர்தல் நேரத்துல தான் பெட்டி அதிகமா சேருது. அதான் காரணம்.
சிம்ரனுக்கு தமிழ்நாட்டுல எத்தனை மாவட்டம், எத்தனை தொகுதின்னு தெரியுமா?. நம்ம அண்ணாச்சி செந்திலு,அம்மா கூட்டணி 134 தொகுதியிலும் ஜெயிச்சுரும்னு பேசுறாரு. எத்தனை தொகுதி மொத்தம்னே தெரியலைநம்ம காமெடியனுக்கு.
அதைவிடக் கொடுமை தமிழே சரியா பேச வராத முரளின்னு ஒரு நடிகன். எதிர்க் கட்சியை என் ரசிகர்களைவைத்து அடித்து உதைப்பேன்னு பேசுறார். அடேய்.. உனக்கு உன்னைத் தவிர ரசிகனே இல்லையேடா.. அப்புறம்யாரை வச்சு யாரை உதைக்கப் போற?
இந்த ராமராஜன் நிலைமை என்ன? சாப்பாட்டுக்கே ரூ. 500 காசு இல்லைன்னு பேட்டி கொடுத்தரு. ஒருஎம்பியாக இருந்தவரு. அவர் எப்படிப்பட்ட அறிவாளி தெரியுமில்ல.. போன தேர்தல்ல பாரதீய ஜனதாதான்யாஜெயிக்கும் சொன்னப்ப, இல்லையில்ல.. பிஜேபி தான் ஜெயிக்கும்னு சொன்ன அறிவாளி அவரு. இப்படிப்பட்டஆளுக தான் அந்தக் கட்சியில எம்பிக்கள்.
இன்னொருத்தரு வந்திருக்காரு. நம்ம இனத்துக்காகப் போடி, கட்சியை ஆரம்பிச்சுட்டு வந்திருக்காரு.. ஆமா..அவரு தான் நெல்சன் மண்டேலா.. அவருதாங்க விஜய்காந்து...
படத்துல மார்க்கெட் போனதும் கட்சியை ஆரம்பிச்சுட்டாரு. இவங்க பின்னாடியெல்லாம் போயிறாம தமிழனதடுக்க வேணாமா? என்றார் சீமான்.
போயஸ் புல்லாங்குழல் வைகோ:
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் கோபண்ணா எழுதிய அராஜக ஆட்சியை அகற்றுவோம் என்ற புத்தகத்தைவெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் தமிழருவி மணியன்,
ஜெயலலிதாவின் பக்கம் நிற்பவர்கள் யார்? சமுதாய சிந்தனை கொண்ட சிம்ரன். கொள்கைக் குன்று கோவைசரளா. வறுமைப் பள்ளத்தில் விழுந்து கிடப்பவர்களுக்கு விடியலை தர வந்து நிற்கும் விந்தியா, கார்ல் மார்சில்இருந்து காந்தீயம் வரை கற்றுத் தெளிந்த கவுண்டமணியின் சீடர் செந்தில் ஆகியோர் தான். இவர்கள் தான்ஜெயலலிதாவின் போர்ப் படைத் தளபதிகள்.
புரட்சிப் புயல் வைகோ இன்று போயஸ் தோட்டத்து பூபாலம் இசைக்கும் புல்லாங்குழலாக மாறிப் போனது.கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தெடுத்த நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்து இப்போது நகைப்புக்குரியவராகமாறிப் போனது வருத்தமே.
விதை நெல்லைத் தின்றுவிட்ட விவசாயிக்கும் வைகோவுக்கும் வித்தியாசம் ஏதும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை கொள்கையற்ற சந்தர்ப்ப சாகசங்களில் ஈடுபடுபவர்களை மக்கள் ஒருபோதும் புரட்சி நாயகனாகஏற்கவே மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications