மாநகராட்சி தோறும் ஐடி பூங்காக்கள்-தயாநிதி
ராஜபாளையம்:
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாநாகராட்சிகள் தோறும் இன்பர்மேசன்டெக்னாலஜி பார்க்குகளை ஏற்படுத்தி லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளைஉருவாக்கிக் காட்டுவோம் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
ராஜபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்த தயாநிதி மாறன் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் தற்போது கம்ப்யூட்டர் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் படிப்புகளைமுடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக பெங்களூர், ஹைதராபாத் போன்றதொலைதூர நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்க சென்னையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவான டைடல்பூங்காவை திமுக ஆட்சியில் தான் அமைத்தோம்.
அதேபோன்ற அனைத்து வசதிகளுடனும் கூடிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களைமதுரை, திருச்சி போன்ற அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்க திமுக ஆட்சிக்குவந்தால் நடவடிக்கை எடுப்போம்.
படித்து விட்டு பெற்றோர் இருக்கும் இடத்திலேயே நல்ல ஊதியத்தில் நல்ல வேலைபார்க்கக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்படும். தொலை தூரம் போக வேண்டியஅவசியம் இருக்காது.
அதற்குத் தேவையான பூங்காக்களை அமைத்து, அதற்கான உட்கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்த திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது துறை மூலம் அதற்கான எல்லா முயற்சிகளையும் நிச்சயம் செய்து தருவேன்என்றார் தயாநிதி மாறன்.












Click it and Unblock the Notifications