திமுக 41% அதிமுக 36%: புதிய கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து குட்வில் கம்யூனிகேசன்ஸ்என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

இது குறித்து கருத்துக் கணிப்பை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் ஜோ அருண், ஜெகத் காஸ்பர் ராஜாஆகியோர் கூறியதாவது:

160 தொகுதிகளில் நாங்கள் கருத்துக் கணிப்பை நடத்தினோம். தொகுதிக்கு 100 பேர் வீதம் மொத்தம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3 தொகுதிகளில் நடத்தப்பட்ட கணிப்பில் தவறுகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதை நீக்கிவிட்டு 157 தொகுதிகளில் மட்டும் எடுத்த சர்வேயை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம்.

இதில் 56 சதவீதத்தினர் கிராமப் பகுதியினர் மற்றும் பெண்கள். மேலும் 15 சதவீதம் பேர் முதல் முறையாகவாக்களிக்க உள்ளவர்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பு ஏப்ரல் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது.

எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள், யார் முதல்வராக வேண்டும் போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

அவர்கள் அளித்த பதிலை வைத்து திமுக கூட்டணிக்கு 41.09 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 36.07 சதவீதமும்ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 49 சதவீதத்தினர் கருணாநிதியையும் 39 சதவீதம் பேர்ஜெயலலிதாவையும் தேர்வு செய்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2 ரூபாய்க்கு அரிசி என்றதிட்டத்தை 65 சதவீதம் பேர் வரவேற்றனர். இலவச கலர் டிவி அறிவிப்புக்கு 57 சதவீத ஆதரவு கிடைத்தது.

சர்வே நடந்த 157 தொகுதிகளில் 102ல் திமுக கூட்டணிக்கும், 53 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கும் மேலும்2ல் பிற கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது தெரியவந்தது.

இதை மாதிரியாக வைத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும் அதிமுககூட்டணி 83லும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

தமிழகததில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என 54 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வைகோவால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் இல்லைஎன்றே பதிலளித்துள்ளனர்.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+