கருணாநிதி தொகுதியில் மே 3ல் ஜெ. பிரசாரம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் முதல்வர்ஜெயலலிதா மே 3ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா,வெளிமாவட்ட பிரசாரத்தை முடித்து விட்டு மே 3ம் தேதி சென்னை திரும்புகிறார்.அடுத்த மூன்று நாட்களும் சென்னையில் உள்ள 14 தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம்மேற்கொள்கிறார்.
சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து 3ம் தேதி தனதுபிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பிராட்வே,ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக பிரசாரம்மேற்கொள்கிறார்.
4 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் அவர் சென்னையில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதிஅவர் ஓய்வு எடுக்கிறார். 6ம் தேதியுடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார் ஜெயலலிதா.அன்றோடு தேர்தல் பிரசாரமும் முடிவுக்கு வருகிறது.
ஏ பாக்கியராஜுக்கு எஸ்.எஸ். சாபம்:
இதற்கிடையே பொள்ளாச்சியில் அமைச்சர் ஜெயராமனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில்,
பாக்கியராஜ் திமுக மேடைகளில் படு ஆபாசமாக பேசுகிறார். அப்படிப் பேசுகிற இவர் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?
ஏ படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார். அவர் இயக்கிய 70 படங்களில் 50 படங்கள் ஆபாசப் படங்கள்தான். அந்தப் படங்களுக்கு ஏ சர்டிபிகேட்கொடுத்துள்ளனர்.
நண்பர் என்ற முறையில் பாக்யராஜை எச்சரிக்கிறேன். கருணாநிதியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டால் விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்.
நான் 30 வருஷம் திமுகவில் இருந்தேன். என்னை ஒரு முறை கூட கவுன்சிலராகக் கூட ஆக்கவில்லை. ஆனால் அம்மாவோ, என்னைபாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார் என்றார் சந்திரன்.
| [an error occurred while processing this directive] | [an error occurred while processing this directive] |
| TAMILNADU NEWS | INDIA NEWS |
| [an error occurred while processing this directive] |












Click it and Unblock the Notifications