• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விலகாதீர்-வேட்பாளர்களுக்கு கேப்டன் கோரிக்கை

By Staff
|

சென்னை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளர்கள், யாருடையநிர்ப்பந்தத்திற்காகவும் போட்டியிலிருந்து விலகக் கூடாது என்று கட்சித் தலைவர்நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவினரின் கடும் மிரட்டல் காரணமாக கார்த்திக் தலைமையிலான பார்வர்ட்பிளாக் மற்றும் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர்கள்பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக கார்த்திக் கட்சி வேட்பாளர்கள்பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

3 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.இதையடுத்து வேட்பாளர்களைக் காக்க அவர்களில் பாதிப் பேரை மனு வாபஸ்அவகாசம் முடியும் வரை கல்யாண மண்டபத்தில் கார்த்திக் அடைத்து வைத்துபாதுகாத்தார்.

ஆனால், மற்றவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களை அதிமுகவினர் தங்கள்பாதுகாப்பில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல தே.மு.தி.க. வேட்பாளர்களும் பல்வேறு தொகுதிகளில் அடுத்தடுத்துவிலகி வந்தனர். சில வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தனர். சிலர் போட்டியிடமறுத்து விலகி விட்டனர்.

மேலும் சிலர் பிரச்சாரத்தைக் கைவிட்டுவிட்டு அமைதியாகியுள்ளனர்,

உட்கட்சிப் பூசலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந் நிலையில் நடிகர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கட்சி நிர்வாகிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கருத்து வேறுபாடு போன்றசெய்திகளால் வருத்தம் அடைந்துள்ளேன். உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,உங்களிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நேரமல்ல இது.உங்களிடையே உள்ள மாச்சரியங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எதிரிகள்நம்மைப் பார்த்து எள்ளி நகையாடாத வண்ணம், ஏகடியம் பேசாவண்ணம்,ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. எதாக இருந்தாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அண்ணா சொன்னதைப் போல எனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தண்டனைகொடுங்கள். ஆனால் கட்சியை தண்டித்து விடாதீர்கள் என்பதைப் போலநடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வெற்றிக்கு இரவு, பகல் பாராமல்பாடுபட்டு வெற்றிக் கனியை பறிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்விஜயகாந்த்.

இதற்கிடையே விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர்கள்பெரும்பாலானவர்களுக்கு முரசு சின்னம் கிடைத்துவிட்டது.

சில இடங்களில் வேறு வேட்பாளர்களும் முரசு சின்னத்தைக் கோரியதால் அங்குகுலுக்கல் நடந்தது. அதிலும் தே.மு.தி.க.வுக்கே முரசு கிடைத்தது.

7 தொகுதிகளில் ஜஸ்ட் மிஸ்!:

7 தொகுதிகளில் மட்டும்தான் முரசு சின்னம் கிடைக்கவில்லை. அதிலும் 2தொகுதிகளில் வேட்பாளர்களின் குழப்பம் காரணமாக அச் சின்னம் கிடைக்காமல்போய் விட்டது.

இந்த 7ல் 6 தொகுதிகளில் மோதிரமும் (அண்ணா நகர், கொளத்தூர், குளச்சல்,ஆலங்குடி, முதுகுளத்தூர், அம்பாசமுத்திரம்), இடைப்பாடி தொகுதியில் மணிசின்னமும் கிடைத்துள்ளது.

விஜய்காந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் உள்பட மொத்தம் 227 தொகுதிகளில் முரசுசின்னத்தில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

விருதாசலத்தில் போட்டியிடும் விஜய்காந்த் என்ற 3 சுயேச்சை வேட்பாளர்களுக்கும்வாழைப்பழம், டிவி பெட்டி, மோதிரம் ஆகியவை வழங்கப்பட்டது.

துணை நடிகை தேவி ஜரீனாவுக்கு மணி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகுதியில்மொத்தம் 14 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் காமெடி என்னவென்றால் கட்சி மோதிரம் சின்னத்தைத்தான் கேட்கிறது என்றுநினைத்து ஆலங்குடி, இடைப்பாடி, கொளத்தூரில் முரசு சின்னத்தைக் கோராமல்விட்டு விட்டார்கள் தேமுதிக வேட்பாளர்கள். இதனால் இந்த சின்னம் கிடைக்காமல்போய் விட்டது.

அதேசமயம், இந்த மூன்று தொகுதிகளிலும் முரசு சின்னம் வேறு யாருக்கும்ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான தொகுதிகளில் முரசு சின்னம் கிடைத்துள்ளதால், விஜயகாந்த்கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து முழுவீச்சில்சின்னங்களை சுவர்களில் வரையும் பணியில் இறங்கியுள்ளனர்.

[an error occurred while processing this directive]
Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X