ஜெவும் ராசியில்லா 8ம்: நல்லகண்ணு கிண்டல்
விளாத்திகுளம்:
வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்தில், ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில்இன்று நடிகைகள் பிரசாரம் செய்யும் அளவுக்கு தமிழக அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் வருத்தத்துடன்கூறினார்.
விளாத்திகுளம் திமுக வேட்பாளர் ராஜாரமை ஆதரித்து தா.பாண்டியன் பிரசாரம்செய்தார். அப்போது அவர் பேசுகையில்,சிந்தித்து ஓட்டுப் போடுங்கள். இன்னும் 12 நாள்தான் உள்ளது, உங்களதுதலையெழுத்தை தீர்மானிக்க.
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் இது. ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில்இன்று கவர்ச்சி சொட்டசொட்ட நடிகைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள்.இவற்றைப் பார்க்கும்போது வேலைக்கே போகாமல் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம்போலத் தெரிகிறது.
அந்த அளவுக்கு அள்ளி வீசுகிறார்கள் என்றார் தா.பாண்டியன்.
ஜெ. ஒரு பயங்கர சர்வாதிகாரி:
இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பர்தான்திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்,
கிட்டத்தட்ட 1 லட்சத்து 75,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரேகையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. இப்படி ஒரு சம்பவம் இந்தியவரலாற்றில் நடந்ததே இல்லை.
என்ன முதல்வர் இவர்? எனது 60 ஆண்டு கால தொழிற்சங்க வாழ்வில் இப்படி ஒருகொடூரமான நிகழ்வை, சர்வாதிகார முதல்வரை நான் பார்த்ததே இல்லை.
முகம்மது பின் துக்ளக், முகம்மது பாதுஷா போன்றவர்கள் போல நடந்து கொள்கிறார்ஜெயலலிதா.
இப்படி ஒரு முதல்வர் தமிழகத்திற்கு மீண்டும் வரக் கூடாது. எனவே தமிழக மக்கள்விழிப்போடு இருந்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்பர்தான்.
ராஜா தாக்கு:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாமதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் நல்ல மாற்று ஆட்சி வர வேண்டும். இது தமிழகத்திற்கு இப்போதுமிகவும் தேவையான ஒன்று. காரணம், கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில்தமிழகத்தில் ஏழைகள் பெருகி விட்டார்கள்.
இந்தியாவிலேயே ஏழைகள் அதிகம் வாழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தைமாற்றி விட்டார் ஜெயலலிதா. இது கொடுமையான ஒரு சாதனை. இந்த சாதனையைச்செய்த வேதனைக்குரிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.
மத்திய அரசு தரும் பணத்தை மக்களுக்காக செலவழிக்காமல், ஊதாரித்தனமாகசெலவு செய்ததும், நேர்மையில்லாத, உறுதிப்பாடு இல்லாத அரசு என்பதை தமிழகஅரசு நிநரூபித்து விட்டது. இந்த அரசுவரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.அதுதான் மக்களுக்கு நல்லது என்றார் ராஜா.
ஜெவுக்கு ராசியில்லா 8: நல்லகண்ணு
இதற்கிடையே செங்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசுகையில்,
தமிழகத்தில் இருள் விலகப் போகும் நாள் தான் மே 8. நல்லகாலம் பார்க்கும் ஜெயலலிதாவுக்கு 9 தான் ராசியாம். 8 ராசியில்லையாம். இதனால்8ம் தேதி தேர்தல் நடப்பது அவருக்கு எதிராகவே முடியும் என்று அவரது ஆட்களே சொல்கிறார்கள்.
எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்றார்.












Click it and Unblock the Notifications