என் வெற்றியே உங்கள் வெற்றி: ஜெயலலிதா
ஈரோடு:
இன்னொரு பொற்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்ல அன்புச் சகோதரியின் அரசுக்குவாக்களியுங்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஈரோட்டில் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின்போது பேசியதாவது:கடந்த 2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றிவிட்டேன். நீங்கள் எதிர்பார்த்ததிட்டங்கள் மட்டுமின்றி, எதிர்பாராத திட்டங்களையும் நான் நிறைவேற்றினேன்.
உங்கள் அன்புச் சகோதரியான நான் செயத் சாதனைகளை ஒரிரு நிமிடத்தில் சொல்லிவிட முடியாது.
உலகில் யாரும் செய்யாத உழவர் பாதுகாப்புத் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்,சைக்கிள் என பல திட்டங்கள்.
ரேசன் கடையில் 10 கிலோ அரிசி இலவசமாகத் தருவோம் என்று உங்கள் அன்பு சகோதரியின் அரசுஅறிவித்துள்ளது.
ஈரோடு நகரம் மஞ்சள் வணிகத்திற்கு பெயர் போனது. இங்கு 50 ஏக்கரில் ரூ. 36 கோடியில் மஞ்சள் வணிகவளாகம் அமைக்க உத்தரவிட்டது உங்கள் அன்புச் சகோதரியின் அரசு தான்.
இதுவரை உங்கள் அன்புச் சகோதரியின் அரசுக்கு மகத்தான ஆதரவை வழங்கி வந்தீர்கள். அந்த ஆதரவை,போரதரவை தொடர்ந்து வழங்கி வேண்டியே நான் இங்கு வந்துள்ளேன்.
உங்களோடு தான் உங்கள் அன்புச் சகோதரியான நான் கூட்டணி வைத்துள்ளேன். இது மக்கள் கூட்டணி,வெற்றிக் கூட்டணி. உங்கள் வெற்றியே என் வெற்றி. என் வெற்றியே உங்கள் வெற்றி.
இன்னொரு பொற்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்ல இதய தெய்வமாம் புரட்சித் தலைவர்எம்ஜிஆர் தந்த வெற்றிச் சின்னமான இரட்டை இலையில் வாக்களிப்பீர்.
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு. வலிமை சேர்ப்பீர் தமிழகத்துக்கு.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.












Click it and Unblock the Notifications