தயாநிதியை நீக்க ஜெ, வைகோ, பாஜக, சு.சுவாமி, சரத் கோரிக்கை
சென்னை:
டாடா நிறுவனத்தை கேவலமாக மிரட்டியன் மூலம் தான் அமைச்சர் பதவி வகிக்கத்தகுதியானவர் இல்லை என்பதை தயாநிதி மாறன் நிரூபித்துள்ளார். அவரைஉடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாடா நிறுவனத்தின் டிடிஎச் சேவைத் திட்டத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிடாடா நிறுவனத்தை தயாநதி மாறன் நிர்ப்பந்தித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.இதன் மூலம் தயாநிதி மாறனின் முகமூடி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அவர் மிகப் பெரிய அவமானச் சின்னமாக விளங்குகிறார். டாடாநிறுவனத்தை தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டியது மிகவும்இழிவான செயலாகும்.
இப்படிப்பட்ட ஒரு அதிகார துஷ்பிரயோகம் இதுவரை நாடு கண்டிராத ஒன்று. மிகவும்வெட்கக் கேடான செயல் இது. ஒழுக்கம், நாணயம் சார்ந்த அனைத்துநெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. திமுக மீண்டும் ஆட்சிக்குவந்தால், சன் டிவி குழுமத்தின் அடக்கியாளும் பிடியிலிருந்து எந்த ஒரு பொருளாதாரவர்த்தக நிறுவனமும் தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
எனவே தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக நீக்கி நாட்டின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
சிபிஐ போடுங்கோ: சு.சுவாமி
டாடா நிறுவனத்தை தம்பி தயாநிதி மாறனும், அண்ணா கலாநிதி மாறனும்மிரட்டியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், உலகப் புகழ் பெற்றடாடா நிறுவனத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சித்த தயாநிதி மாறன், தனதுஅமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல,தண்டனைக்குரிய குற்றம்.
தயாநிதி மாறனின் நடவடிக்கை மிகவும் கேவலமானது. அவரது மிரட்டல் தொடர்பாகடாடா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். எனவே தயாநிதி மாறன் அமைச்சர்பதவியில் தொடரக் கூடாது என்று கோரி நானும் பிரதமருக்குக் கடிதம்எழுதியுள்ளேன்.
சன் டிவி நிறுவனத்தின் நிதி நிலை, எப்படி அது இவ்வளவு பெரிய நிறுவனமாகமாறியது, பயங்கரவாத அமைப்பு ஏதாவதுடன் அதற்கு தொடர்பு உள்ளதா என்பதுகுறித்தும் தனியாக விசாரிக்க வேண்டும்.
தவிர, தம்பி, அண்ணா இருவரும் சேர்ந்து பெரிய நிறுவனத்தை கேவலமாக பேசிமிரட்டியிருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றார்சுவாமி.
வழக்கு போடட்டும்: வைகோ
தொழிலதிபர் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியது தொடர்பாக நான் தெரிவித்ததகவல்கள் உண்மை என நிரூபணமாகியுள்ளது. இதுதொடர்பாக என் மீது வழக்குபோட தயாநிதி மாறன் தயாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகேட்டுள்ளார்.
டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாக வைகோதான் முதலில் தகவல்வெளியிட்டார். இந் நிலையில் தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலை குறித்துதூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் நகர் புதூரில் செய்தியாளர்களிடம் வைகோபேசுகையில்,
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தொலைக்காட்சித் துறையில் வேறு யாரும் கால்பதித்து விடக் கூடாது என்பதற்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவருகிறார்.
இந் நிலையில்தான் டாடா டிடிஎச். சேவையை கைப்பற்றி, அதை டாடா நிறுவனம்நடத்த விடாத வகையில் இடையூறுகள் கொடுக்கிறார். இதுகுறித்து நான் கூறியகுற்றச்சாட்டுக்கள் இன்று உண்மையாகி விட்டன. நான் ஆதாரம் இல்லாமல் எந்தப்புகாரையும், குற்றச்சாட்டையும் வைக்க மாட்டேன்.
பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர், நேர்மையானவர், சுத்தமானவர். மத்தியில்நல்லாட்சி நடக்க வேண்டும் என்றால், நேர்மையான ஆட்சி இருக்க வேண்டும்என்றால் தயாநிதி மாறனை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.அவர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது.
தயாநிதி மாறன் குறித்த அத்தனை புகார்களுக்கும் என்னிடம் போதிய ஆதாரங்கள்உள்ளது. முடிந்தால் அவர் என் மீது வழக்கு போடட்டும். அந்த வழக்குகளை சந்திக்கநான் தயாராக இருக்கிறேன் என்றார் வைகோ.
மாறனை நீக்க பாஜக கோரிக்கை:
இதற்கிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் டெல்லியில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தொழிலதிபர் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியது தொடர்பான சர்ச்சை சீரியஸானது.இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மையான விவரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரியவேண்டியது அவசியம். இந்த பிரச்சினையில் தெளிவு கிடைக்கும் வரை தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை உடனடியாக நீக்க வேண்டும்.
தயாநிதி மாறன் செய்திருப்பதைப் பார்க்கும்போது எந்தளவுக்கு அதிகாரதுஷ்பிரயோகம் நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.
நாடு முழுவதும் நல்ல மதிப்பையும், மரியாதையையும் வைத்துள்ளது டாடாநிறுவனம்.
அப்பேர்ப்பட்ட மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபரை மிரட்டுவதை ஏற்றுக் கொள்ளடியாது என்றார் ஜாவேத்கர்.
என்னத்த சொல்ல?: சரத்குமார்
இந் நிலையில் இன்று மதுரையில் நிருபர்களிடம் பேசிய சரத்குமார்,
நான் சென்ற இடமெல்லாம் மக்கள் மிகப் பெரிய எழுச்சியுடன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திமுகவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து எல்லா தொழிலையும் தாங்களே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். டாடா குடும்பத்தையே மிரட்டும்அளவுக்கு இங்கே ஏதேச்சதிகாரம் வளர்ந்துவிட்டது.
இதில் பிரதமர் தலையிட்டு விசாரித்து, மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ரூ. 2 லட்சம் கோடிக்கு அதிபதியான டாடாவையே மிரட்டுகிறார் என்றார் என்னத்தைச் சொல்ல?. தயாநிதியிடம் தரம் கிடையாது, அரசியல் நாகரீகம்கிடையாது என்றார்.
ப.சிதம்பரம் கருத்து:
இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டபோது, இதுகுறித்து தயாநிதி மாறன் விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications