நான் கள்ள ஓட்டு கம்பெனி தலைவன்: எஸ்.எஸ்.
திண்டுக்கல்:
திமுகவில் இருந்தபோது நான்தான் கள்ள ஓட்டு கம்பெனிக்கே தலைவன். எனவேதிமுவினர் எப்படி கள்ள ஓட்டுப் போடுவார்கள்என்பது எனக்கு நன்றாகவே தெரியும்என்று நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்சீனிவாசனை ஆதரித்து எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில்,ஜெயலலிதா ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை கொடுத்தவர். ஆனால்கருணாநிதியையோ, கொடுத்த வேட்டி, சேலைகளை கிழிப்பார். இந்தியாவிலேயேமுதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தவர் ஜெயலலிதாதான்.
அதுமட்டுமா? மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்தார், இலவசசைக்கிள் கொடுத்தார், புத்தகம் கொடுத்தார். இப்பேற்பட்ட நல்ல முதல்வரை இன்றுவைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுகிறார்கள்,ஆதரிக்கிறார்கள்.
இதைப் பார்த்து பயந்து போன கருணாநிதி, டெல்லியிலிருந்து சோனியா காந்தியைவரவழைத்துப் பிரசாரம் செய்தார். இன்னும் விட்டால் அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ்புஷ்ஷையும் அழைத்து வந்து பிரசாரம் செய்வார்.
ஒரு காலத்தில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தான் வீரப்பன்.தமிழக மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கொள்ளைக்காரன் வீரப்பனைகருணாநிதி ஆட்சிக் காலத்தில் பிடிக்கக் கூடாது என்று சொன்னார்.
அதிரடிப்படை நடவடிக்கைகளை முடக்கி வைத்தார். அப்பேற்பட்ட வீரப்பனை டிஜிபிவிஜயக்குமார் தலைமையிலான அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. இதை ஜப்பான்நாட்டு பத்திரிகைகளே பாராட்டின.
இந்தியாவிலேயே கள்ள ஓட்டுப் போடுவதில் கருணாநிதி பெரிய கில்லாடி. நான்திமுகவில் இருந்தபோது கள்ள ஓட்டுக் கம்பெனிக்கே நான்தான் தலைவன்.அதனால்தான் இவ்வளவு தெளிவாக சொல்கிறேன்.
கடந்த 35 வருடமாக திமுகவில் இருந்தேன். ஒரு சிங்கிள் டீ கூட வாங்கித் தராதவர்கருணாநிதி. அவரா, இலவச கலர் டிவி கொடுக்கப் போகிறார்?
அதிமுகவில் சேர்ந்த 2 வருடங்களிலேயே என்னை எம்.பி. ஆக்கினார் அம்மா.ஆனால் திமுகவில் எனக்கு பஞ்சாயத்து போர்டு தலைவர் பதவியைக் கூடத்தரவில்லை என்றார் எஸ்.எஸ்.சந்திரன்.
பொடி வைக்கிறார்: முரளி
இந் நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவேட்பாளர் வீர இளவரசனை ஆதரித்து நடிகர் முரளி பிரசாரம் செய்தார். அவர்பேசுகையில்,
தமிழகத்தில் பொற்கால அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சி மீண்டும் மலரவேண்டும். சாதி, மத, இனக் கலவரம் இப்போது இங்கு இல்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக வசித்து வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியை உழவர் பாதுகாப்புத் திட்டம்மூலமும், இலவச பாடப் புத்தகம் வழங்கியும், விவசாயிகளின் குழந்தைகள், டாக்டர்,என்ஜீனியராக வர வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார் புரட்சித் தலைவி.
சிங்கத்தைப் பற்றி இன்று கலைஞர் பேசுகிறார். அப்படிப் பேசுகிறவர், டாக்டர்சேதுராமன் போன்றவர்களுக்கு என்ன செய்தார்? பொடி வைத்துப் பேசி மக்களைதிசை திருப்பப் பார்க்கிறார் கருணாநிதி.
அவரது கவர்ச்சியான திட்டங்களுக்கு யாரும் செவி சாய்க்க வேண்டாம் என்றார்முரளி.












Click it and Unblock the Notifications