இலங்கை: இந்தியா தலையிட ராமதாஸ்கோரிக்கை- மீண்டும் அமைதிப் பேச்சு?
கொழும் - விழுப்புரம்:
இலங்கையில் மீண்டும் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்திய அரசுதலையிட்டு சிங்கள பேரினவாத அரசின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
விழுப்புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இலங்கையில் மீண்டும் அபாயம் ஏற்பட்டுளளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிஇலங்கை ராணுவம் விடுதலைப் புலிகள் மற்றும் அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்நடத்தி வருகிறது.
இதற்கு இலங்கை அரசுதான் காறணம். ஈழத் தமிழரக்ள் சம உரிமைகளைப் பெற்றுசமத்துவத்தோடு வாழ்வதற்கான முயற்சியை மேற்கொள்ள இந்தியா உடனடியாகதலையிட வேண்டும்.
உலக நாடுகளும் இதில் தலையிட்டு சிங்களப் பேரினவாத முயற்சிகளைத் தடுத்துநிறுத்த வேண்டும்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு நிரந்தர நிம்மதியையும், தீர்வையும் தேடித் தரவேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்ராமதாஸ்.
மீண்டும் அமைதிப் பேச்சு:
இதற்கிடையே தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படை குண்டு வீச்சுத்தாக்குதலை நிறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருமே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக நார்வே தூதர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications