விசுவை அதிமுகவுக்கு கூட்டிச் சென்ற மனசாட்சி
சென்னை:
அதிமுகவில் சேருமாறு எனது மனசாட்சி சொன்னதால் நான் அக்கட்சியில் சேர்ந்தேன்என்று இயக்குனர் விசு கூறியுள்ளார்.
இவரது அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை சன் டிவி முடிவுக்குக் கொண்டு வர முடிவுசெய்த நலையில் திடீரென அதிமுகவில் சேர்ந்தார் விசு.நாடக நடிகர் எஸ்.வி.சேகர் மூலமாக அதிமுகவுக்கு கொண்டு செல்லப்பட்ட விசுவின்அரட்டை அரங்கத்துக்கு ஜெயா டிவி மறுவாழ்வு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் சென்னை மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தனது சிஷ்யகோடிஎஸ்.வி.சேகரை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.
பின்னர் நங்கநல்லூர் பகுதியில் அமைச்சர் வளர்மதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்தக் கூட்டங்களில் விசு பேசுகையில், நான் எப்போதுமே இரட்டை இலைக்குத்தான்ஓட்டுப் போட்டு வருகிறேன். அதனால்தான் அதிமுகவில் சேர்ந்துள்ளேன்.
எனது மனசாட்சியிடம் கேட்டேன், அரட்டை அரங்கம் நடத்துவதன் மூலம் பல்வேறுகட்சியினரின் அன்பைப் பெற்றுள்ள நான் எந்தக் கட்சியில் சேருவதுஎன்று யோசித்தநான் திமுகவில் சேரலாமா என்று மனசாட்சியிடம் கேட்டேன்.
அதற்கு மனசாட்சி சொன்னது, நீ நினைக்கும் திமுக இப்போது இல்லை. திமுகதொண்டர்களே அக்கட்சி மீது நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஒரு குடும்பத்தைமட்டுமே பாதுகாக்கும் கட்சியாக அது இப்போது உள்ளது.
இதேபோல பாமக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் என்று அத்தனை கட்சிகள் குறித்தும்எனது மனசாட்சி விளக்கியது. அப்போதுதான் அதிமுகவில் சேர்ந்து விடு என்றுமனசாட்சி என்னிடம் தெளிவாகக் கூறியது. அதனால்தான் நான் அதிமுகவில்சேர்ந்தேன்.
அரட்டை அரங்கம் மூலம் நல்ல அதிகாரிகளைப் பற்றிய செய்தியைச் சொன்னால்உடனே அதை கட் செய்து விடுவார்கள். அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமேஎன்பதால் நல்ல விஷயங்களை அதன் மூலம் சொல்ல விட மாட்டார்கள்.
இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகள். இந்தத் தேர்தலில் திமுக ஜெயிக்கும் வாய்ப்பேஇல்லை. தப்பித் தவறி ஜெயித்து விட்டால், மத்தியில் தயாநிதி, மாநிலத்தில் ஸ்டாலின்என்பது அவர்கள் எண்ணம். ஆனால் மத்தியில் தயாநிதி, மாநிலத்தில் கலாநிதி என்பதுமாறன் சகோதரர்களின் திட்டம்.
டாடாவை மிரட்டியவர்கள், தாத்தாவை மிரட்ட மாட்டார்களா என்றார் விசு.












Click it and Unblock the Notifications