திண்டிவனம் கட்சி வேட்பாளர் படுகொலை
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சிவேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பொன்னுச்சாமி படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொன்னுச்சாமி, திண்டிவனம் ராமமூர்த்தியின்தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில்போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவருக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தீவிர பிரசாரத்திலும் அவர்ஈடுபட்டிருந்தார்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் காளியாப்பட்டி பிரிவு சாலையில்வாய்க்கால் ஒன்றில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்துகிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
பிணமாகக் கிடந்தவர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தியபோதுதான் அவர்வேட்பாளர் பொன்னுச்சாமி என்பது தெரிய வந்தது.
பொன்னுச்சாமியை சிலர் கடத்திச் சென்று படுகொலை செய்திருப்பதாக போலீஸார்சந்தேகிக்கிறார்கள். தேர்தல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும்கூறப்படுகிறது.
இதுகுறித்து தொகுதி தேர்தல் அதிகாரியான மோகன்தாஸ் விசாரணைமேற்கொண்டுள்ளார். போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடிவருகிறார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர் இறந்தால் மட்டுமே அத்தொகுதியில் தேர்தல்தள்ளி வைக்கப்படும். ஆனால் தற்போது கொலை செய்ப்பட்டுள்ள பொன்னுச்சாமிஅங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளர் என்பதால் கிருஷ்ணராயபுரம் தொகுதியில்திட்டமிட்டபடி மே 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications