அதிமுக நடத்திய பண பேரம்: போன் ஆதாரத்துடன் நிரூபித்த கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பார்வர்ட் பிளாக் வேட்பாளரிடம் அதிமுகவினர் ரூ. 2 லட்சம் பேரம் பேசியதை போன் ஆதாரத்துடன் நிரூபித்தார்அக் கட்சியின் தலைவர் கார்த்திக்.

மதுரையில் நிருபர்களிடம் கார்த்திக் பேசுகையில்,

அதிமுகவினரிடம் இருந்து மட்டுமல்ல போலீஸ் தரப்பில் இருந்தும் எங்களுக்கு தொடர்ந்த மிரட்டல்கள் வந்துகொண்டுள்ளது. பணம் தருகிறோம், வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலகு. ஓட்டு கேட்டு பிரச்சாரத்துக்குவராதே என்று மிரட்டிப் பார்க்கிறார்கள் என்றார்.

இவ்வாறு கார்த்திக் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடன் இருந்த மதுரை மேற்குத் தொகுதி பார்வர்ட்பிளாக் வேட்பாளர் சரவணனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் வந்த நம்பரைப் பார்த்த சரவணன் அதிர்ச்சியாகி, அண்ணே.. இந்த நம்பர்ல இருந்து தான் (ஜெயா டிவிநிருபரின் நம்பர்) என்னைத் தொடர்பு கொண்டு மிரட்டினார்கள். பணம் தர்றேன்.. போட்டியிலிருந்து விலகுன்னுஎன்கிட்ட பலமுறை பேசுனது இந்த நம்பர்ல இருந்து தான் என்றார்.

இதையடுத்து போனை வாங்கிய கார்த்திக், அதன் ஸ்பீக்கரை ஆன் செய்து எல்லோரும் கேட்குமாறு செய்துவிட்டு,இப்போ அந்த ஆள்கிட்ட பேசு என்று போனை சரவணனிடம் கொடுத்தார்.

இதையடுத்து சரவணன் ஹலோ சொல்ல, மறுமுனையில் பேசிய குரல், சரவணா நான் ஏற்கனவே சொன்ன மாதிரிரூ. 2 லட்சம் கொடுக்கிறோம். முதல் தவணையா ஒரு லட்சத்தை இப்போவே வாங்கிக்குங்க. மீதி ஒரு லட்சத்தைவிழுப்புரத்துல அம்மா மீட் பண்ணி கட்சியில சேர்ந்துட்டு வாங்கிகுங்க என்று கூறிவிட்டு போன் கட் ஆனது.

பேசியது ஜெயா டிவி நிருபர்:

இதையடுத்து கார்த்திக் தொடர்ந்து ஆவேசமாக நிருபர்களிடம் பேசுகையில்,

இது யார் நம்பர் தெரியுமா?. ஜெயா டிவி நிருபர் ராம்குமார் நம்பர் தான். பேசுனதும் அவர் தான். இது போலபணத்கைக் காட்டியும் மிரட்டியும் எங்கள் வேட்பாளர்களை வளைக்க பார்க்கிறார்கள். இது உங்க முன்னாடியேநடந்த விஷயம்.

இது போல எங்கள் வேட்பாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பல வகைகளிலும் நெருக்குதல்கள் வந்துகொண்டுள்ளன. தோல்வி பயத்தில் மிரட்டவும் விலைக்கு வாங்கவும் அலையாய் அலைகிறார்கள். இவர்களுக்குமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

முதலில் என்னையும் கட்சியையும் தொண்டர்களையும் மிகவும் சாதாரணமாகக் கணக்கிட்டுவிட்டார்கள். ஆனால்,இப்போது அவர்களுக்கு அவர்களது நிலை தெரிந்துவிட்டது. எங்கள் பலமும் தெரிந்துவிட்டது. இதனால்அதிகாரத்தை, போலீஸை, பணத்தை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள்.

இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். நேதாஜியும் தேவர் அய்யாவும் உருவாக்கிய கட்சிக்குகளங்கம் விளைவிக்கும் இவர்களுக்கு தேர்தலில் பாடம் காத்திருக்கிறது.

சமூக சிந்தனையுடன், பொதுவான நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகள் செயல்படவேண்டும். மற்ற கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளுக்கு கெடுதல் செய்யநினைக்கக் கூடாது.

கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும் கடைசி வரையில்பாடுபடுவேன். யாரையும் குறை சொல்ல பிரசாரம் செய்ய மாட்டேன். கட்சியின்கொள்கையை சொல்லித்தான் பிரசாரம் செய்வேன்.

எந்தத் தடை வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தீவிரமாக தேர்தல்பணியாற்றுவோம் என்றார் கார்த்திக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+