ஜெ. நகைகளின் மதிப்பு: ப.சிதம்பரம் கேள்வி
மதுரை:
முதல்வர் ஜெயலலிதா தனது வருமான வரியைக் கூட முறையாக செலுத்தவில்லை என நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம்,ஆண்டிப்பட்டியில் தனது வேட்பு மனுவோடு தனது சொத்து விவரப் பட்டியலையும் தந்துள்ளார் முதல்வர்ஜெயலலிதா அவர்கள். அந்தப் பட்டியலில், எனது நகைகள் நீதிமன்றத்தில் உள்ளதால் (வருமானத்தை மீறிசொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக)அதன் மதிப்பைக் குறிப்பிட முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
வழக்கு நடந்தால் அந்த நகைகளின் மதிப்பை சொல்ல முடியாதா? அவ்வளவு விலை மதிப்பில்லா நகைகளாஅவை?. தான் வாங்கிய நகையின் மதிப்பு எப்படி ஒருவருக்குத் தெரியாமல் போய்விடும். கோகினூர் வைரத்துக்கூட மதிப்பு உள்ளதே?
எனக்குக் கிடைத்துள்ள தகவலின்படி ஜெயலலிதாவின் 2004-2005ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் கூடதவறுகள் உள்ளன. அவர் தனது வருமான வரியைக் கூட முறையாக செலுத்தவில்லை என்று கருணாநிதிசொல்வது உண்மை தான் என்றார் சிதம்பரம்.
வருமான வரித்துறை கிடுக்கிப் பிடி:
இதற்கிடையே தமிழகத்தில் இப்போது களத்தில் உள்ள 2,586 வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ள சொத்துவிவரப் பட்டியலை வருமான வரித்துறையினர் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
யார் யார் தங்களது சொத்துக்களுக்கு வருமான வரி செலுத்தவில்லை என்ற விசாரணையை வருமான வரித்துறைதொடங்கியுள்ளது. விரைவில் உரிய வரி செலுத்தாத வேட்பாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்படும் என்றுதெரிகிறது. அவர்கள் மீது வரி ஏய்ப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications