முஸ்லீம்களை காக்க தவறியவர் கருணாநிதி-திருமா

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

பாஜக கூட்டணியில் இருந்தபோது அந்தக் கட்சியை சந்தோஷப்படுத்த,இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி வேட்டையாடியவர் திமுகதலைவர் கருணாநிதி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்திருமாவளவன் கூறியுள்ளார்.

காட்டுமன்னார்கோவில வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து லால்பேட்டை என்றஇடத்தில் திருமாவளவன் பேசினார்.

அப்போது, இங்குள்ள இஸ்லாமிய மக்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்குஅதிக வாக்குகளை அளித்து கெளரவித்தார்கள். இஸ்லாமிய மக்களின் உண்மையானபாதுகாவலனாக அதிமுக அரசு திகழ்கிறது. அந்த அரசு மீண்டும் வர வேண்டும்.

நீண்ட நெடுங்காலமாக திமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரித்து வந்தார்கள்.ஆனால் 16 ஆண்டு காலம் முதல்வராக இருந்த கருணாநிதி இஸ்லாமியர்களுக்குஎன்ன செய்தார்? காயிதே மில்லத் காலத்திலிருந்து இட ஒதுக்கீடு கோரிக்கை இருந்துவருகிறது.

இதை கருணாநிதி கண்டுகொள்ளவே இலலை. இப்போது இட ஒதுக்கீடு தருவோம்என்று வாக்குறுதி அளிக்கிறார்கள்.

இஸ்லாமியர், தலித் ஒற்றுமை அரசுக்குத் தேவை.

இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து அவர்களுக்கு உறுதுணையாகநாங்கள் போராடுவோம். ராணுவத்தில் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும்ஒதுக்கீடு கிடையாது.

இதுபோன்று அனைத்துத் தரப்பிலும் பிரதிநிதித்துவம் கோரி போராட வேண்டும்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியவர் கருணாநிதி. கோவைகுண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் கருணாநிதி ஆட்சியில் போலீஸார்இஸ்லாமிய மக்களை வேட்டையாடியதை யாரும் மறக்கவில்லை.

இஸ்லாமியர்களின் காவலன் என்று கூறிக் கொண்டு அவர்களை தீவிரவாதிகளாகமுத்திரை குத்தியவர்தான் கருணாநிதி. அதேபோல தலித்துகளுக்கும் அவர் எதிரானவர்என்றார் திருமாவளவன்.

கருணாநிதிக்கு எதிராக தேவர் பேரவை:

இந் நிலையில் தலித், தேவரின மக்களிடையே தேவையில்லாமல் கலகம் மூட்டும்வகையில் பேசியுள்ள கருணாநிதி, தென் மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும்அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்தியதேவர் பேரவை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக பேரவையின் பொதுச் செயலாளர் கதிரேசன் வெளியிட்டுள்ளஅறிக்கையில,

சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதா என்று தேவையில்லாமல்பேசி தலித் மக்கள் மற்றும் தேவரின மக்களிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில்கருத்து தெரிவித்துள்ளார் கருணாநிதி.

தனக்கு ஆதரவான கார்த்திக்கை ஆதரிக்கும்போது விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பை இணைத்து கருத்து தெரிவித்திருப்பதில் தீய நோக்கம் இருப்பது தெரியவருகிறது. இதை நல்லவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஜாதிக் கலவரத்திற்கு கருணாநிதி வித்திடுகிறார் என்று வைகோ தெரிவித்தகண்டனத்திற்குப் பதிலளிக்கையில் மிருக சாதிகளுக்குள் சண்டை வந்தால் நான் என்னசெய்ய முடியும் என்று பதிலுக்கு விஷம் கக்கியுள்ளார் கருணாநிதி.

இந்த தடித்த வார்த்தைகளால் தேவரின மக்களையும், தலித் மக்களையும் மிருகங்கள்என்று அவர் வசைபாடியுள்ளார்.

அடிக்கடி பூர்வீக தமிழ்க் குடிகளை மோத விட்டு தேர்தல் ஆதாயம் தேட முயலும்கருணாநிதியை கண்டிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கருணாநிதியையும்,திமுகவையும் புறக்கணிப்பார்கள்.

கருணாநிதி எப்போது தென் தமிழகம் வந்தாலும் அவருக்கு அனைத்து தேவரினஅமைப்புகளும் சேர்ந்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம் என்றுகூறியுள்ளார் கதிரேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+