நெல்லை: லாரி-வேன் மோதலில் 9 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 கன்னியாஸ்திரிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம்ஒன்று உள்ளது. இந்த இல்லத்தின் பொறுப்பாளராக உள்ள கன்னியாஸ்திரி ரோஸ் மேரிஅந்த் பொறுப்பை ஏற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி விழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் கலந்து கொள்ள ரோஸ் மேரியின் உறவினர்கள் நாகர்கோவில் அருகேஉள்ள பெருவிளை கிராமத்திலிருந்து வேன் மூலம் பாளையங்கோட்டை வந்தனர்.விழா முடிந்ததும் இரவு ஊருக்குக் கிளம்பினர்.
நாங்குனேரி அருகே உள்ள வாகைகுளம் அருகே வேன் சென்றபோது, எதிரே வந்தலாரியுடன் பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த 2 கன்னியாஸ்திரிகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications