ஆப்கான்: கடத்தப்பட்ட இந்தியர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய பொறியாளரான சூர்யநாராயணா(வயது 41) தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு சாக்கடையில் கிடந்தது.

Suryanaranayas wife Manjula, daughter Anusha and Son Satya Teja with his photo

தொலைத் தொடர்புப் பொறியாளரான ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யநாராயணா தாலிபான் தீவிரவாதிகளால்கடத்திச் செல்லப்பட்டார். பஹ்ரைனைச் சேர்ந்த அல்-மொயத் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரை அந்நிறுவனம் தான் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

தெற்கு ஆப்கானில்தானின் சபூல் பகுதியில் தனது பணியை முடித்துவிட்டு டிரைவருடன் வேனில் சென்றுகொண்டிருந்த சூர்யநாராயணாவையும், ஆப்கானைச் சேர்ந்த அந்த டிரைவரையும் காண்டஹார்-காபூல்நெடுஞ்சாலையில் வைத்து தாலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இதையடுச்து சூர்யநாராயணாவை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆப்கானில் உள்ளஇந்திய தொழிலாளர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் வெளியேறினால் தான் சூர்யநாராயணாவைவிடுவிப்போம் என தாலிபான்கள் கெடு விதித்தனர்.

இந்த நிபந்தனையை இந்தியா ஏற்க மறுத்தது. மேலும் சூர்யநாராயணாவை அமெரிக்க உளவாளி என்றும்தாலிபான்கள் குற்றம் சாட்டினர்.

அவரை மீட்க தீவிர முயற்சிகள் நடந்த நிலையில் இன்று சூர்யநாராயணாவின் உடல் சபூல் பகுதியில்கண்டெடுக்கப்பட்டது. சாலையோர சாக்கடையில் அவரது உடல் கிடந்தது.

இப்போது அவரது உடல் கான்சி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகம்மத் யூசும் என்பவன் தொலைபேசி மூலம் அந் நாட்டுசெய்தி நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொண்டு, நேற்று மாலை சூர்யநாராயணா தப்பிச் செல்ல முயன்றதால்சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளான்.

கொல்லப்பட்ட சூர்யநாராயணாவுக்கு மனைவி மஞ்சுளா, மகள் அனுஷா, மகன் சத்யதேஜா மற்றும் இன்னொருமகள் உள்ளனர்.

சூர்யநாராயணாவை மீட்கக் கோரி இந்தக் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில்இந்த கொலை அவர்களை நிலை குலைய வைத்துள்ளது.

இந்தக் கொலையை பிரதமர் மன்மோகன் சிங் மிக வன்மையாக் கண்டித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+