அதிமுகவில் மேலும் 6 பா.பி. வேட்பாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

அதிமுகவினரின் தீவிர முயற்சி காரணமாக மேலும் 6 பார்வர்ட் பிளாக் கட்சிவேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் பார்வர்ட் பிளாக்கின் சிங்கம் சின்னம் அதிமுகவை ரொம்பவேமிரட்டி வருகிறது. முக்குலத்தோர் அதிகம் உள்ள கிராமப் பகுதிகளில் எல்லாம் திமுக,அதிமுகவுக்கு இணையாக சிங்கம் சின்னமும் படபடக்கிறது.

வழக்கமாக அதிமுகவுக்குப் போகும் இவர்களது வாக்குகளை சிங்கம் சிதறிக்கும்என்பதால் முதல்வர் ஜெயலலிதா பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார்.இதையடுத்து பார்வர்ட் பிளாக் கட்சியினரை விலை பேசியது அதிமுக.பணியாதவர்கள் போலீசாரால் மிரட்டப்பட்டு வருவதாக அக் கட்சியின் தலைவர்கார்த்திக் புகார் கூறியுள்ளார்.

இந் நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சியின் பல வேட்பாளர்கள் அதிமுகவில்இணைந்து வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் ஆண்டிப்பட்டி தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொன் முருகன்.

கார்த்திக்குடன் படு நெருக்கமாக இருந்து வந்த பொன் முருகன் அதிமுகவில்தஞ்சமடைந்தது கார்த்திக்கை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவர் தவிர மேலும் சில வேட்பாளர்களும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் தற்கொலையே செய்து கொண்டார். இந்நிலையில் மேலும் 6 பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்கள் தற்போது அதிமுகவில்இணைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னிலையில்இவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

சமயநல்லூர் வேட்பாளர் ராஜாசிங், நிலக்கோட்டை செல்வம், மானாமதுரை ரமேஷ்,திருப்பத்தூர் கேசவ பாண்டியன், விளாத்திகுளம் முருகேச பாண்டியன், கடையநல்லூர்சுப்பையா பாண்டியன் ஆகியோரே அந்த வேட்பாளர்கள்.

இதேபோல திருச்செந்தூர் தொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பரிசமுத்துவும்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இத்தொகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்குஆதரவாக போட்டியிலிருந்து விலகியுள்ள பரிசமுத்து, அதிமுகவிலும் இணைந்துவிட்டார்.

இவர்களையெல்லாம் அதிமுகவினர் பணம் கொடுத்து இழுத்துவிட்டதாக கார்த்திக்தரப்பு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+