மண்ணெண்ணெய் விலையை குறைப்போம்- கருணாநிதி
சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்தால் ரேசனில் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.
ரூ. 2க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டிவி, ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் என தேர்தல் அறிக்கை மூலம் அதிமுகவைகிடுகிடுக்க வைத்தார் கருணாநிதி. இதையடுத்து 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு முதல்வர்ஜெயலலிதா தள்ளப்பட்டார்.இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ரேசனில் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் விலையைக் குறைப்போம் என்றுஅறிவித்துள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி இதைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில்,
கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளன. இதற்காக அதை நம்பிக் கொண்டு திமுகவினர்மெத்தனமாகிவிடக் கூடாது. தீவிரமான பிரச்சாரம் தொடர வேண்டும்.
தயாநிதி மாறன் மீதுள்ள பொறாமையால், எரிச்சலால் அவர் மீது பொய்யான புகார்களைக் கூறுகிறார்கள். (டாடாவிஷயத்தில்) உருப்படியான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. புகார் சொன்னவர்கள் மீது தயாநிதியே வழக்குபோட்டுள்ளார். அதை அவர்கள் சந்திக்கட்டும்.
தயாநிதி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் நானே அவர் மீது நடவடிக்கை எடுப்பேன். பேரன் என்ற தயவு தாட்சண்யம்எல்லாம் பார்க்க மாட்டேன். கட்சி உறுப்பினர் என்ற வகையில் அவர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பேன்.ஆனால், அவர் மீதான புகார்களுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்பது தெரிகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க திசை திருப்பும் வகையில் இப்படி தவறான குற்றசாட்டைக் கூறுகிறார்கள்.
நான் ஜாதி மோதலைத் தூண்டியதாக பேசுகிறார் ஒருவர். நான் இலக்கியரீதியில் பதில் சொன்னேனே தவிர, அதில் உள்நோக்கம் ஏதும் கிடையாது என்றார்.
தேர்தல் நாள் நெருங்கியவுடன் உங்கள் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவப் போவதாக வைகோ கூறியிருக்கிறாரே என்றுகேட்டதற்கு,
மோகனஸ்திரத்துக்கு அடிமைப்பட்டவர்கள் எந்த அஸ்திரத்தையும் பிரயோகிப்பார்கள். அந்த அஸ்திரங்கள் தான் முனைமுறியுமே தவிர நான் பாதிக்கப்பட்டதுமில்லை, பாதிக்கப்படப் போவதுமில்லை.
தமிழத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா என்று கேட்டதற்கு, தற்போதுள்ள நிலையில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும்வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications