மகள்களுடன் பிரசாரத்தில் கலக்கும் முத்துலட்சுமி!

Subscribe to Oneindia Tamil

பெண்ணாகரம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தனது இரு மகள்களுடனும்பிரசாரக் களத்தில் கலக்கி வருகிறார்

Muthulakshmi

பெண்ணாகரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முத்துலட்சுமிக்குபாமகவில் ஒரு தரப்பினர் தீவிர ஆதரவு கொடுக்கின்றனர். இதனால் திமுக வேட்பாளர்பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

முத்துலட்சுமியை வாபஸ் பெறுமாறு ராமதாஸ் கோரியும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மாறாக தீவிரப் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கிராமம் கிராமமாக சென்று தனது கணவருக்கு நேர்ந்த அநீதி, அதிரடிப் படையினரின்அக்கிரமங்கள், தனது கணவர் மலை வாழ் மக்களுக்காக பாடுபட்டதுஉள்ளிட்டவற்றை கூறி எளிமையாக பிரசாரம செய்கிறார்.

தற்போது முத்துலட்சுமியின் மகள்களான வித்யாராணி, பிரபா ஆகியோரும்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தாயிடம் வந்துள்ளனர்.

தங்களது தாயார் தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக இருவரும்வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பெண்ணாகரம் தொகுதிக்குட்பட்ட நெருப்பூர்தான் முத்துலட்சுமிக்கு சொந்த ஊர்.எனவே இதைக் கூறி முத்துலட்சுமியின் மகள்கள் ஓட்டு கேட்கின்றனர். மகள்கள்சகிதம் வாக்கு கேட்டு வரும் முத்துலட்சுமிக்கு தொகுதி பெண்களிடையேஅனுதாபமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் திமுக தரப்பு பெரும் பீதியில் மூழ்கியுள்ளது.

அப்பாக்களும் பிள்ளைகளும்:

தேர்தல் களம் கண்டுள்ள பிரபலங்களுக்கு ஆதரவு கோரி அவர்களது வாரிசுகள்பிரசாரக் களத்தில் குதித்திருப்பதால் பிரச்சாரம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Simbu

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில்போட்டியிடுகிறார். திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில்போட்டியிடுகிறார்.

லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.இவர்களுக்கு ஆதரவாக அவர்களது பிள்ளைகளும், குடும்பத்தினரும் தீவிர வாக்குவேட்டையில் குதித்துள்ளனர்.

கருணாநிதிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அவரது மகள் கனிமொழி, செல்வி,ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

மிக எளிமையாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்கும் இவர்களுக்கு தொகுதியில்செம வரவேற்பு கிடைக்கிறது.

இதேபோல ஸ்டாலினுக்கு ஆதரவாக அவரது மகன் உதயநிதி வாக்கு கேட்டு பிரசாரம்மேற்கொண்டுள்ளார். தனது தந்தை செய்த சாதனைகளை பட்டியலிட்டு துண்டுப்பிரசுரங்களை கையில் ஏந்தியபடி தொகுதி முழுவதும் வலம் வரும் உதயநிதி வீடுவீடாக சென்று அவற்றைக் கொடுத்து ஓட்டு கேட்கிறார்.

முரசொலி மாறனின் மகள் டாக்டர் எழிலரசியும் உதயநிதியுடன் செல்கிறார்.

இதேபோல இயக்குனர் ராஜேந்தருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார் அவரதுமகன் நடிகர் சிலம்பரசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+