ஸ்டாலின்-தயாநிதி மாறன் மோதல்: சரத் தகவல்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

எனக்கும், எனது மனைவி ராதிகாவுக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டுள்ளன. இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, பயப்படவும்மாட்டோம் என்று சமீபத்தில் திமுகவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய நடிகர்சரத்குமார் கூறியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

எனது மனைவி ராதிகா தேவைப்பட்டால் மட்டுமே பிரசாரத்திற்கு வருவார்.அதுகுறித்து இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. (ராதிகா பிரச்சாரத்துக்கு வரமறுத்து வருவது குறிப்பிடத்தக்கது)

எனது பிரசாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதிமுகவுக்கு சிறந்தவரவேற்பு உள்ளது.

திமுக குடும்ப டிவி நிறுவனத்தினர் தொடர்ந்து என்னையும், ராதிகாவையும் மிரட்டிவருகிறார்கள். இதனால் நான் மிகவும் புண்பட்டுள்ளேன். ஆனால் நான் எதற்கும்அடிபணிய மாட்டேன்.

எனது மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளையும், பிற வேலைகளையும் கவனித்துக்கொண்டு வருகிறார். மிரட்டல் காரணமாக நானும் எனது குடும்பத்தை பொறுப்பாகபார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன்.

ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி நினைக்கிறார். ஆனால் தயாநிதிமாறன்-கலாநிதி மாறன் கூட்டணியைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது என்றார் சரத்குமார்.

இவ்வளவு பேசும் சரத்குமார் இன்னும் திமுக எம்பியாகவே நீடிப்பதுகுறிப்பிடத்தக்கது. தனது பதவியை முறைப்படி அவர் இன்னும் ராஜினாமாசெய்யவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+