வைகோ தூண்டிய ஜாதி கலவரம்-கருணாநிதி தாக்கு
ஈரோடு:
கலிங்கப்பட்டி கிராமத்தில் அவர் (வைகோ) ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதால் சிலர்இறந்தர் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியபோது ஓடோடி வந்துஅவரைக் காப்பாற்றியது நான்தான் என்பதை அவர் மறந்து விடக் கூடாது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், நான் ஜாதிச் சண்டைஏற்படும் விதமாக பேசுகிறேன் என்றும், என்னை தேர்தலில் நிற்க தடை விதிக்கவேண்டும் என்றும் ஒருவர் பேசி வருகிறார், முயற்சித்து வருகிறார்.ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், தோல்வி பயத்தால்தான் அவர் இந்தத்தேர்தலில் நிற்கவில்லை. அவர் என்னைப் பார்த்து குற்றம் சொல்கிறார்.
கலிங்கப்பட்டியில் சாதிச் சண்டை ஏற்பட்டு அதில் சிலர் இறந்தபோது, அவர்தூண்டியதால்தான் சாதிக் கலவரம் ஏற்பட்டது, உயிரிழப்பு ஏற்பட்டது என்றுகம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதையும், நான்தான் சமரசப்படுத்தஅங்கு விரைந்து சென்றேன் என்பதையும் அவர் வசதியாக மறந்து விட்டார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களை திசைதிருப்பலாம் அல்லது தேர்தலைத் தடுக்கலாம் என சிலர் சதி செய்து வருகின்றனர்.
தமிழக போலீஸ் உளவுத்துறை ஆட்சியாளர்களிடம் கொடுத்துள்ள கருத்துக்கணிப்புதான் இதற்குக் காரணம். திமுக வெற்றி பெறும் என்று அவர்கள்ஆட்சியாளர்களிடம் தெரிவித்துவிட்டனர்.
பெரியாரின் குருகுலத்தில் அண்ணாவிடம் கற்ற பாடத்தை வைத்து 70 ஆண்டு காலம்அரசியல் நடத்தி வருகிறேன். அந்தப் பாடம் முக்கியமானது. அந்தப் பாடத்தைவைத்து, ஜெயலலிதா கூறிய பரம்பரை யுத்தத்தை சந்தித்து வெற்றி பெறுவேன்.
எனது அரசியல் வரலாற்றில் இதுபோன்ற எழுச்சியை தமிழகத்தில் நான்பார்த்ததில்லை. பாட்டாளி மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கையில் வைத்திருக்கும்கூட்டத்தின் கனவு இத்தேர்தலில் பலிக்காது.
ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் இப்போரில் ஜனநாயகமேவெல்லும்.
மே 8ம் நாள், தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிககும் நாளாக அமையும் என்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications