புதுவை-3 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட 3 தொகுதிகளில் 3ம் தேதி வாக்குப் பதிவுநடப்பதால் அங்கு இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில்கேரள மாநிலத்திற்குள் உள்ள பல்லூர், மாஹே மற்றும் ஆந்திராவுக்குள் உள்ள ஏனாம்ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் மே 3ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் இந்தத் தொகுதிகளில் பிரசாரம் முடிவுக்குவருகிறது. சம்பந்தப்பட்ட 3 தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து மீதமுள்ள 27 தொகுதிகளுக்கும் தமிழகத்துடன் சேர்த்து மே 8ம்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications