டாடா ஏஜென்சிக்காக வைகோ புளுகு: தயாநிதி
திருச்சி:
ஒரு ருபாயில் நாடு முழுவதும் பேசும் ஒன் இந்தியா திட்டத்தால் லாபத்தை இழந்துள்ள சிலர் தான் என் மீதுபொய்யாக குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள் என மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,அறிவியல்-தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் என் துறையில்ஒரே இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே ரூபாயில் பேச வாய்ப்புஉருவானது.
இதை மக்கள் வரவேற்றார்கள். ஆனாலும் சில குறுகிய புத்திக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. அதைத் தடுக்கமுயன்றார்கள். அவர்களது சதியையும் மீறி திட்டம் நிறைவேறிவிட்டது.
இவர்களுக்காக நான் அமைச்சராகவில்லை. மக்களுக்காக அமைச்சரானேன்.
இந்தத் திட்டத்தால் சில தனியார் நிறுவனங்களுக்க லாபம் குறைந்தது. இதனால் அவர்கள் கடுப்பில் உள்ளனர்.சிலர் அந்த நிறுவனங்களின் ஏஜென்டுகளாக செயல்பட்டு என் மீது புழுதி வாரி இறைக்க முயல்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சன் டிவியை இழுத்து பிரதமருக்கு அத்வானி கடிதம் எழுதியுள்ளார். நான் அமைச்சராவதற்குமுன்பே வளர்ந்துவிட்ட நிறுவனம் சன் டிவி. அதை வளர்த்தது மக்கள். நான் அல்ல, அதன் வளர்ச்சிக்கு என்உதவியும் தேவையில்லை.
ஐடிசி சிகரெட் நிறுவனம் தென்னிந்தியாவில் எந்த அரசியல்வாதிக்கும் ஏஜென்சி கொடுப்பதில்லை. ஆனால்,வைகோவின் மகன் தான் ஐடிசி டெப்போவை இங்கே பினாமி பெயரில் நடத்தி வருகிறார்.
மேலும் டாடா நிறுவனம் தயாரிக்கும் சுமோ, இண்டிகா கார்களை தென் மாவட்டங்களில் விற்க தனது மகனபெயரில் ஏஜென்சி எடுக்க வைகோ முயற்சிக்கிறார். இதனால் டாடாவுக்கு ஆதரவாகவும் எனக்கு எதிராகவும்குரல் கொடுத்தால் அந்த ஏஜென்சி கிடைத்துவிடும் என நம்புகிறார்.
இதனால் டாடாவை நான் மிரட்டியதாக வீண் பழி சுமத்துகிறார் என்றார் தயாநிதி.
தெஹல்காவும் அத்வானியும்:
இந் நிலையில் தயாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த விவகாரத்தில் பிரதமருக்கு அத்வானி கடிதம் எழுதியுள்ளார். தெஹல்கா மோசடியில் பல்வேறு பாஜகதலைவர்கள் கையும் களவுமான வீடியோவில் பிடிபட்டபோது அதைப் பற்றி விசாரிக்கக் கூட முன் வராதஅத்வானி இன்று டாடா விவகாரத்தில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது.
பொய்யான கதைக்கே விசாரணை கேட்கும் அத்வானி, பாஜக தலைவர்கள் அப்பட்டமாக வீடியோவில்சிக்கியபோது ஏன் விசாரிக்க முன் வரவில்லை என்று கூறியுள்ளார்.
சம்மன் வாங்க வைகோ மறுப்பு:
இதற்கிடையே தன் மீது அபாண்டம் சுமத்தியதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தயாநிதிஅனுப்பிய நீதிமன்ற சம்மனை வாங்க வைகோ மறுத்து வருவாத தயாநிதியின் வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக ரகசிய உறவு:
இதற்கிடையே அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தயாநிதி மாறன் விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒரே மாதிரியாக பேசுகின்றன, ஒரேமாதிரியே செயல்படுகின்றன. அவர்களது சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது இரு கட்சிகளும் ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டுசெயல்படுகின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.
வெளியில் தனித் தனியாக போட்டியிடுவது போல காட்டிக் கொண்டாலும் கூட, ரகசிய உறவு கொண்டு இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதுபோலவே தெரிகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் இவ்வாறு இரு கட்சிகள் செயல்படுவது இதுவே முதல் முறை என நான் நினைக்கிறேன். இது அரசியலையேகளங்கப்படுத்தும் செயல்.
இரு கட்சிகளுமே தோல்வி பயத்தில் உள்ளன. இதனால் பொய்யான வதந்திகளைப் பரப்பியும், பண பலத்தை வைத்தும் வாக்காளர்களை வளைக்கமுயற்சிக்கின்றன என்றார் கிருஷ்ணசாமி.
வாசன் கருத்து:
மத்திய அமைச்சர் வாசன் கூறுகையில்,
தயாநிதி மீது திடீர் புகார் பின்னணிக்கு 2 காரணங்கள். ஒன்று ஜெயலலிதாவின் தோல்வி பயம். இரண்டாவது அதிமுக-பாஜக இடையிலான அண்டர்கிரவுண்ட்அண்டர்ஸ்டான்டிங். தயாநிதியைத் தாக்கினால் பிர்சசாரத்தை திசை திருப்பலாம் என்ற அதிமுகவின் திட்டத்துக்கு பாஜக கை கொடுத்துள்ளது. இதன் மூலம்இருவரின் ரகசிய உறவு அம்பலமாகிவிட்டது என்றார்.
வரதாராஜன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒரு ரூபாய்க்கு நாடு முழுவதும் பேசலாம் என்று பிஎஸ்என்எல் மூலம் தயாநிதி கொண்டு வந்த திட்டம் தனியார் தொலைத் தொடர்புத்துறை அதிபர்களுக்கும்சுரண்டல் பேர்வழிகளுக்கும் பெரும் நஷ்டத்தை உருவாக்கி வருகிறது. அந்த இழப்பு காரணமாக சுரண்டல்காரர்கள் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை தான் தயாநிதிவிவகாரம்.
இந்த சுரண்டல் பேர்வழிகளின் தீவிர ஆதரவாளர்களான பாஜகவும் அதிமுகவும் கைகோர்த்துக் கொண்டதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லைஎன்றார்.












Click it and Unblock the Notifications